என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை.
- ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான்.
சாதி, மதம் அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- வன்னியர் சங்கத்தின் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடத்தப்பட்டது.
- வி.சி.க. கொடிக்கம்பம் பாமக தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாமக தொண்டர்களால் விசிக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்து கொள்கிறேன்.
- கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது.
- அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை.
கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. சுதாகரன் இருந்து வருகிறார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சீரமைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தலைவர் கே. சுதாகரன் கூட மாற்றப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கே. சுதாகரனை மாற்ற தேவையில்லை என திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்ற வேண்டியதில்லை. சுதாகரன் தலைமையில் இடைத்தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை. அவரை தொடர்ந்து தலைவராக செயல்பட விட வேண்டும். அவருக்காக எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும்.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்னை பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டால், விசுவாசமான மற்றும் மேலிடத்திற்கு கீழ்படிவான ஒரு தொண்டனாக அவர்களது கட்டளைக்கு கீழ்படிவேன்" என சுதாகரன் தெரிவித்திருந்தார்.
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார்.
- ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார். மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்தும், திரைத்துறை உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.
பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது
- சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்.
பஞ்சாப் மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. தேர்வின் வரைவுத் திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ஆம்னில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, 2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
- தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.
மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் மற்றும் வி. சோமன்னா ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என மத்திய அரசிடம் கேட்டேன். நாம் வலியுறுத்தலாம் அல்லது அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அனுமதிக்க முடியாது எனக் கூட சொல்லாம். ஆனால், அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.
தாமதங்களை நாங்கள் விரும்பாததால், மேகதாது திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம். மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கையை மத்திய அமைச்சரிடம் கேட்டோம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
- இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று 2024 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் விளாசிய பேட்ஸ்மேன்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இவர்தான் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேரி கிரிஸ்டன் (188), விவ் ரிச்சர்ட்ஸ் (181), ஃபஹர் ஜமான் (180*), பென் டக்கெட் (165), ஆண்ட்ரூ ஹட்சன் (161) இதற்கு முன் பாகிஸ்தானில் அதிகபட்ச ரன்கள் அடித்துள்ளார்.
- கூலி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின.
- ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது.
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர்நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில், 'கூலி' படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
கூலி படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகின. ஆதலால் அந்த பாடல் தொடர்பான அப்டேட் தான் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
நாடு முழுவதும் விரதமிருந்து இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும் மகா சிவராத்தி வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதிலும் விரதம் இருந்து, இரவு கண் விழித்து சிவபெருமானை வழிபடும் அனைத்து மக்களுக்கும், 'மகா சிவராத்திரி' தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,சிறப்பு வாய்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் நல்வழி பிறந்து, வெற்றிகள் நம் வசமாகி, எல்லோர்க்கும் எல்லா வளமும் பெற்று சிறக்க சிவபெருமானை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிதி பங்களிப்பு அடிப்படையில், தொகுதிகளை மறுசீரமைக்கலாம்
- தேசக் கட்டுமானத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது.
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதி மறுவரையறை அறிக்கைக்கு தெலுங்கானா பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு செயல்படுத்த விரும்பினால், மக்கள்தொகையை அடிப்படையாக கொள்ளாமல், மாநிலங்கள் அளிக்கும் நிதியை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தட்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கையை பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
- பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






