என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: 177 ரன்கள் விளாசி பல சாதனைகள் படைத்த இப்ராஹிம் ஜத்ரன்
- ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் விளாசிய பேட்ஸ்மேன்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8-வது போட்டியில் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 146 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 177 ரன்கள் விளாசினார். இதன்மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 165 ரன்கள் விளாசியிருந்தார். தற்போது அதை இப்ராஹிம் ஜத்ரன் முறியடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக இவர்தான் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் அடித்திருந்தார். தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் சதம் அடித்து அதிக ஸ்கோரை பதிவு செய்ய பேட்ஸ்மேன்கள் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
கேரி கிரிஸ்டன் (188), விவ் ரிச்சர்ட்ஸ் (181), ஃபஹர் ஜமான் (180*), பென் டக்கெட் (165), ஆண்ட்ரூ ஹட்சன் (161) இதற்கு முன் பாகிஸ்தானில் அதிகபட்ச ரன்கள் அடித்துள்ளார்.






