என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
- மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.
தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.
தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
- எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

- குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
- அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.
2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.
- நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாவனா நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெயில், தீபாவளி, கூடல் நகர், ராமேஷ்வரம் மற்றும் அசல் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது `தி டோர்' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜெயா தேவ் இயக்கியுள்ளார். இது ஒரு திரில்லர் கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயபிரகாஷ் , சிவரஞ்சனி மற்றும் பாலா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை வருண் உன்னி மேற்கொள்கிறார். படத்தின் டீசரை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்தியில், மத்திய அரசு எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தியுள்ளது.
இதனுடன், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் (ALLOWANCE) மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
- காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
- அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.
சென்னை திருவான்மியூரில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், பங்கேற்று நோன்பு திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.
பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்.
மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியிலான மோதல் ஏற்படாமல் திமுக அரசு காக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அக்சர் படேல் தலைமையில் டெல்லி அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.
- லக்னோ அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் இடம் பெறவில்லை.
ஐபிஎல் 2025 சீசனின் 4-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணியில் கே.எல். ராகுல் இடம் பெறவில்லை. அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளது. இதனால் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி விவரம்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி ஷபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், ரவி பிஷ்னோய்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
மெக்கர்க், டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்.
- 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
- மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
1960ல் பம்பாய் மாகாணத்தில் இருந்து பிரிந்து குஜராத் மாநிலம் உருவானத்தில் இருந்து அங்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு ஆளும் பாஜக அரசு, கடந்த 2023 இல் காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் (Gandhinagar Gift City) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விருந்தினர்களுக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு அளித்தது.
இந்நகருக்கு வரும் உலகளாவிய முதலீட்டாளர்கள், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்காக இந்த தளர்வு அளிக்கப்பட்டிருந்ததது. அதன்படி இந்நகரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில் கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விற்ற மதுபானங்களின் மூலம் குஜராத் அரசு ரூ. 94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தகவலை இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் கலால் இலாகாவை தன்வசமே வைத்துள்ள பூபேந்திர படேல், மதுபான விற்பனைக்கு வழங்கப்பட்ட உரிமம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூபேந்திர படேல் பேசியதாவது, ஜனவரி 31, 2025 நிலவரப்படி, கிஃப்ட் சிட்டியில், 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
இங்கு மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மதுபான விற்பனையிலிருந்து மாநில அரசு ரூ.94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும் பூபேந்திர பாகல் தெரிவித்தார். பூரண மதுவிலக்கு அமலில் இருந்தும் வணிக நோக்கங்களை கருத்தில் கொண்டு குஜராத் அரசு வழங்கியுள்ள இந்த தளர்வும், அதன்மூலம் வருமானம் ஈட்டி வருவதும் விமரிசனத்துக்குள்ளாகி வருகிறது.
- நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.'
- இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான 'கண்ணாடி பூவே' சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான கனிமா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு பாடல் மிக வைரலாக அமைந்தது. இப்பாடல் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும்.இப்பாடலின் வரிகளை விவேக் எழுத சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இந்நிலையில் கனிமா பாடல் உருவான விதத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த காட்சி 15 நிமிட சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதாகவும். அதில் பாடல், சண்டை மற்றும் வசன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் படக்குழு கூறியுள்ளது.
- அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
- பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- ஹமாஸ் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
- இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் கடும் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
அப்போது காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி ஏழு வாரங்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த பிறகு மேலும் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 7 வார போர் நிறுத்தம் முடிவடைந்த பின்னர், தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. மனிதாபிமான உதவிகள் செல்ல தடைவிதித்தது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கான புதிய பரிந்துரையை எகிப்து வழங்கியது. எகிப்து தனது பரிந்துரையில், "ஹமாஸ் உயிரோடுள்ள ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதில் அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதியுடன் அடங்குவார். அதற்குப் பதிலாக இஸ்ரேல் காசா முனைக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைய அனுமதிக்க வேண்டும். சில வாரங்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இஸ்ரேல் சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும்" குறிப்படப்பட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த பரிந்துரையை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவர 50,082 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,13,408 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






