2025-26 நிதியாண்டில் ரூ. 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்: திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல்

குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.
2025-26 நிதியாண்டில் ரூ. 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்: திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல்
Published on: 

2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com