search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iftar fast"

    • காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு நடந்தது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிக்கல் நகர் செயலாளர் அம்ஜத் கான், சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்தர், பச்சமால், நிர்வாகிகள் செய்யது இப்ராகிம், கனி, முனியசாமி, குமைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
    • அப்போது பேசிய அவர் மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தது திமுக அரசு என தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரையில் தி.மு.க. சார்பில் புனித ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இஸ்லாமிய மக்களுக்கு எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மத வேறுபாடு இல்லாமல் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுது ஆட்சியில் வந்ததோ, அப்போது இஸ்லாமிய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்கள், சாதனைகள் உருவாக்கி தரப்பட்டுள்ளன. இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. அரசு.

    முதல் முறை ஆட்சிக்கு வந்தவுடன் மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அதன்பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சி அதனை ரத்துசெய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மிலாது நபிக்கு அரசு விடுமுறை கொண்டுவரப்பட்டது.

    கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது தி.மு.க. அரசு. கோரிக்கை வைக்காமலே செய்யும் அரசு, கோரிக்கை வைத்தால் செய்யாமல் இருக்குமா? அனைத்தையும் உள்ளடக்கிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    ×