என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • LED திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
    • நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.

    திமுக அரசு ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள முனைப்பு காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

    மேலும், அரசு விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் வெளியிட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள அரசு பணத்தை செலவிட முனைப்பு காட்டும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!

    ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத்

    திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.

    அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385

    ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை

    அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மூன்று நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்றும், அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு LED திரைகளைப் பொருத்தும் பணியை வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையை விட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்திற்கு ஒரு LEDதிரைக்கு சுமார் ரூ. 7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான LED திரையை வாங்க சுமார் ரூ.10,000/- வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும், பஞ்சாயத்து கிளர்க்குகளும் அந்நிறுவனத்திற்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் LED திரைக்கான தொகையையும்

    வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனர்.

    தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர்

    வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

    ஏற்கெனவே, 2006-2011 ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி தங்களது குடும்பத்

    தொலைகாட்சி நிறுவனங்களின் நிதிநிலையை வளர்த்துக்கொண்டது.

    ஏற்கெனவே 4 ஆண்டுகளாக வெற்று விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தது போக, ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தராமல், அந்நிதியை மடை மாற்றும் விடியா திமுக ஸ்டாலினின் (ஏமாற்று) மாடல் அரசின் கடந்த நான்காண்டு கால நடவடிக்கைகள் வேதனையைத்தான் தந்துள்ளது என்று தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

    இந்நிலையில் 4 ஆண்டு சாதனை என்று பொய்யான செய்திகளை வீடியோக்களாகத் தயாரித்து அதை கிராமங்கள்தோறும் LED திரைகள் மூலம்

    ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

    'கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்' என்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படும் ஊழல் மாடல் தி.மு.க. அரசு,

    டு.நு.னு. திரை அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளை அடிக்க முயல்வது கண்டனத்திற்குரியதாகும். மக்களின்

    வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாங்கள் எதுவும் செய்வோம், யாரும் எங்களைக் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் மக்களின் வரிப் பணத்தை தங்களுடைய சுயநலத்திற்காக செலவிடுவது கண்டிக்கத்தக்கது.

    அதற்கான விலையை விரைவில் ஏற்படவுள்ள ஆட்சி சதற்றத்திற்குப் பின் தர நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாமகவில் ராமதாஸ் அணியினரின் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

    ராமதாஸ் நியமித்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான மாநில செயற்குழு கூட்டத்திற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியிடம், "அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    அப்போது அவர்," அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்" என ஜி.கே.மணி பதில் அளித்துள்ளார்.

    • திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.
    • மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகங்கை திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அஜித் குமாரின் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில், நவீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போலீசார் அடித்ததில் நவீனின் பாதத்தில் வலி உள்ளது என்றும் அதனால், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
    • ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் கடந்த 27-ந்தேதி நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் 2 அறைகளை பதிவு செய்து தங்கினார்கள். அப்போது இருவரும் விடுதி அருகில் வைத்து நன்றாக மது அருந்தி உள்ளனர்.

    அப்போது பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் இளம்பெண்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் அனைவரும் விடுதி அறையிலேயே படுத்து தூங்கி உள்ளனர்.

    வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும் போதையில் தள்ளாடிய படியே மது மயக்கத்தில் தூங்கி உள்ளார்.

    நீண்ட நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது ஆடைகள் கலைந்திருந்தன. அலங்கோலமான நிலையில் அவர் காட்சி அளித்துள்ளார். இதன் பிறகே அவர் மதுபோதையில் ஆண் நண்பரின் அறையில் சென்று தூங்கியது தெரியவந்தது. அருகில் பெண் தோழியின் ஆண் நண்பர் படுத்திருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த ஆண் நண்பர் தான் மதுபோதையில் வேலூர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வேலூர் பெண் தனது தோழியான பெரம்பூர் இளம்பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

    அங்கு தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

    இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஆண் நண்பர்களோடு தூங்கியதில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது.
    • யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

    குன்னூர்:

    மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு தட்டுப்பாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வந்த ஒரு காட்டு யானை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, கே.என்.ஆர்., மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வந்தது.

    அந்த யானை இன்று காலை மரப்பாலம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தண்டவாள பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது. அப்போது மரப்பாலம் பகுதியில் தண்டவாள பாதையில் ஒற்றை காட்டு யானை நிற்பது தெரிய வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பைலட் உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். அதன்பிறகும் அந்த யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் ஒருவழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் மரப்பாலம் பகுதி தண்டவாளத்தில் நின்றிருந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வம் கலந்த அதிர்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர்.

    • காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த கால தாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.
    • மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை அனுப்பவே பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையும், காலிப் பணியிடங்களை நிரப்புவதில் பெருத்த கால தாமதத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையும் கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மூடப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
    • நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல் கலைக்கழகத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டியை வலுப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரகுராமன், மண்டல தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து பேசினார். எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம்.

    ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர்களை நேரடியாக தொடர்பு கொள்வது, அரசு நலத்திட்டங்களை விளக்குவது போன்ற பணிகளை பூத் கமிட்டி உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.



    பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி ஆகியோர் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணிகள் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி நடத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து செப்டம்பர் 13-ந்தேதி மதுரையிலும், அக்டோபர் 26-ந்தேதி கோவையிலும், நவம்பர் 23-ந்தேதி சேலத்திலும், டிசம்பர் 21-ந்தேதி தஞ்சையிலும் மாநாடு நடத்தப்பட உள்ளது.

    அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி திருவண்ணாமலையிலும், ஜனவரி 24-ந்தேதி திருவள்ளூரிலும் மண்டல மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி, தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை உள்ளிட்டவற்றை சாதகமான அம்சங்களாக பா.ஜ.க. கருதுகிறது. விஜய் அரசியலுக்கு வருகை, நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி ஆகியவை பாதகம் என பா.ஜ.க. பட்டியலிட்டு உள்ளது.

    எனவே முதல் முறை வாக்காளர்களை ஒருங்கிணைப்பது மற்றும் தேசிய உணர்வை ஏற்படுத்துவது பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இதற்காக பூத் அளவில் மாதம் ஒருமுறை தெரு முனை கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிகழ்ச்சி இன்று முழுவதும் பல்வேறு அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள மாநில, மாவட்ட, மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    மத்திய அரசின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் சரி பார்ப்பது, சமூக ஊடகங்கள் மூலம் கட்சியின் செய்திகளை பரப்புவது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய முறையில் பதிலடி கொடுப்பது, தேர்தல் நாளில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    • எடப்பாடியாருக்கு சென்னையில் உள்ள வீட்டிற்கும், சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
    • எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கோட்டை மேடு பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் கூறியதாவது:-

    மக்களின் கோரிக்கையை ஏற்று இசட் பிளஸ் பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எடப்பாடியாருக்கு சென்னையில் உள்ள வீட்டிற்கும், சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும். ஏற்கனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கழக அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்து இன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பை எடப்பாடியாருக்கு வழங்கி உள்ளது. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடியாருக்கு இன்றைக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    எட்டு கோடி மக்களின் பாதுகாவலர் எடப்பாடியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலம் தமிழக மக்களின் உள்ளமும் குளிர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.
    • அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தற்சமயம் தமிழகத்தை உலுக்கிய ஒரு மிகப்பெரிய வேதனையான பிரச்சனை. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம்.

    இதற்கு காரணம் தமிழக அரசினுடைய செயல்பாடு. காவல்துறை வசம் முதலமைச்சரிடம் தான் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கும் தமிழகத்திலே படிப்படியாக கடைசி புள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது.

    முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இறந்த காவலாளி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், டாஸ்மாக் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் குறையாது.

    அரசினுடைய தவறுகளை, விரோத போக்கை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். வருகின்ற தேர்தலிலே ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே பாடம் புகட்டுவார்கள் என்பதிலே மாற்று கருத்து இருக்க முடியாது.

    இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க., த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணி தலைவராக உள்ளார்.

    அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள். எனவே தமிழகத்தினுடைய வெற்றி அணியாக முதல் அணியாக செயல்பட தொடங்கி இருக்கிற அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்தி கொடுப்பார்கள் . இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.

    நாளை முதல் கோவை மண்டலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக அமையும். அ.தி.மு.க, பா.ஜ.க-த.மா.கா வெற்றி கூட்டணி.

    கீழடி ஆய்வில் நம்முடைய பாரம்பரிய பெருமைகளுக்கு எடுத்துக்காட்டாக உதாரணங்கள் நிஜ வடிவிலே வெளிவந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் தேர்தலில் அதிக சீட் கேட்கிறார்கள் என்பது அவர்களுடைய கட்சி விவகாரம்.

    இந்தி மொழியை மத்திய பா.ஜ.க அரசு ஒருபோதும் திணிக்கவில்லை. .

    வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் குன்றிய நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை பொருளாதாரத்தில் படிப்படியாக உயர்த்திய பெருமை பா.ஜ.க. ஆட்சியே ஆகும். பிரதமர் மோடி திறம்பட பணியாற்றி வருகிறார்.

    இதனை ஜீரணிக்க முடியாத தி.மு.க அரசு வாக்கு வங்கிக்காக ஜாதி, மதத்தை பிரித்து பார்த்து பேசுகிறது. அது ஏற்புடையது அல்ல.

    காவிரியின் கடைமடை வரை இன்னும் காவிரி நீர் சென்று சேரவில்லை. இதனால் பல இடங்களில் விதைத்த பயிர்கள் கருகி வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது. எனவே அரசு கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதிப்படுத்த வேண்டும்.

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் மிகுந்த மரியாதைக்குரிய தலைவர்கள். பா.ம.க.வில் ஒட்டுமொத்தமாக நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி த.மா.கா.

    தமிழகத்தினுடைய இன்றைய பல்வேறு துறையினுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட்ட முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட தலைவர். இன்றைக்கும் மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடிய தலைவர். பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எல்லா வருடமும் அவரது பிறந்த தின விழாவை மிகச் சிறப்பாக ஒரு பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்து அதனை பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் சென்னை மாநகராட்சி புரசைவாக்கத்தில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டமாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • காலை 10 மணியளவில், மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம், மேல் விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 30 படுக்கை வசதிகளைக் கொண்ட முழு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கழக அரசின் சாதனையை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டி, 23.2.2025 அன்று இந்த மருத்துவமனையை தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று முதல் இம்மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் பணியில் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நோய்வாய்ப்படும் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும் தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அ.தி.மு.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில், 10-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், தலைமையிலும் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவிலான நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பட்டாசு தொழிற்சாலை 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கியது. முழுக்க முழுக்க பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையில் தொழிலாளர்கள் வந்து வேலையை தொடங்கினர். முன்னதாக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதையடுத்து அருகில் இருந்த அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவியதுடன், அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசுகளால் 16 அறைகள் இடிந்து தரைமட்டமானது. விபத்து நடந்த பட்டாசு ஆலையில் இருந்து பல மீட்டர் உயரத்திற்கு புகை கிளம்பியது. அதே போல் வெடிச்சத்தம் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பட்டாசு ஆலைக்கு திரண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சிவகாசி, தாயில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அருகில் மீட்பு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதில் விபத்து நடந்த அறைகளுக்கு அருகே பலத்த காயங்களுடன் போராடிய ராஜசேகர், ராஜபாண்டி, கண்ணன், கமலேஷ், ராஜேஸ் ஆகிய 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை நீக்கி பார்த்தபோது அங்கு பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அடுத்தடுத்த அறைகளிலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

    இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மருந்து கலக்கும் பணியின் போது விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலை போர்மென் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 1-ந்தேதி சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானார்கள். அந்த சோகம் அடங்குவதற்குள் சாத்தூர் அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.
    • பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான்.

    சென்னை:

    பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதியானது முதல் விமர்சனங்களும், சலசலப்பும் தொடர்ந்து கொண்டே உள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க. கட்சியின் பங்கு இருக்கும் என்றார்.

    மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று அமித் ஷா கூறியிருந்தார். இதனால் அ.தி.மு.க. -பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது. கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க.வின் திட்டம் ஒன்றும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றார். 

    ×