என் மலர்
இந்தியா
- 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை:
ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (13/08/2025) சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் 'மண் காப்போம் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று இக்கருத்தரங்கம் குறித்து பேசினர்.
சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மெகா பயிற்சி கருத்தரங்குகளும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 முதல் 10 வரையிலான ஒரு நாள் களப்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனுடன் கோவை செம்மேடு மற்றும் திருவண்ணாமலையில் மண் காப்போம் இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி இயற்கை பண்ணைகளில் 3 மாத இலவச களப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை, 'இயற்கை விவசாய பயிற்றுநர்களாகவும்' உருவாக்கி வருகிறோம். அவர்களின் பண்ணைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O
இன்றைய சூழலில் வேளாண் சார்ந்த சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.
கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பினை தொடர்ந்து இந்தாண்டு எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.
கருத்தரங்கு பேச்சாளர்கள்
இக்கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் MSME திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நபார்டு கடனுதவி திட்டங்கள் குறித்து நபார்டின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சியளித்த குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் வசந்தகுமார், வேளாண் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் MSME அரசுத் திட்டங்கள் குறித்து வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுடன் நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து தஞ்சாவூர் வசீகரா வேதா விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் பிராடக்ட்ஸின் தனலட்சுமி விக்னேஷ், பனங்கருப்பட்டி தொழில் நுட்பங்கள் குறித்து தூத்துக்குடி ஃபாம் இரா நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.
கண்காட்சி
இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.
தருமபுரி:
அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இதையொட்டி வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு இரவு தருமபுரிக்கு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.
தொடர்ந்து 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு ஒட்டப்பட்டி, கற்கஞ்சிபுரம் வழியாக பி.எம்.பி. கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார்.
பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- புகழும் பொருளும் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த கூலி
- தொடரட்டும் உங்கள் தொழில் நிலைக்கட்டும் உங்கள் புகழ்
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
50 ஆண்டுகள்
ஒரே துறையில்
உச்சத்தில் இருப்பது
அபூர்வம்
ரஜினி
நீங்கள் ஓர் அபூர்வ ராகம்
புகழும் பொருளும்
உங்கள்
உழைப்புக்குக் கிடைத்த
கூலி
தொடரட்டும்
உங்கள் தொழில்
நிலைக்கட்டும்
உங்கள் புகழ்
"இளமை இனிமேல் போகாது
முதுமை எனக்கு வாராது" என்று
முத்து படத்தில் எழுதிய
முத்திரை வரியால்
வாழ்த்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
- ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது 24 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூா், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
- சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:
மணச்சநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ, கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைக்கும் லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டுள்ளார் திருப்பத்தூரில் உள்ள அனைத்து சிறுநீரகங்களையும் அகற்ற வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார். இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன.
மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்.எல்.ஏ.வே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், தி.மு.க. அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
- 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதற்கான ஆலோசனைகளை நம் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்.
S.I.R, வாக்காளர் பட்டியல் முறைகேட்டுக்கு கண்டனம் - 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் வெற்றிக்குப் பாராட்டு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதற்கான ஆலோசனைகளை நம் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
- விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை என பொய்யாக போக்சோ புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.
இதனையடுத்து, "போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
- இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
- கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.
இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகத்தில் மனைவியுடன் நடனமாடிய கல்வித்துறை அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலானது.
தேவி பிரசாத் என்ற கல்வித்துறை அதிகாரி தனது மனைவியுடன் அலுவலகத்தில் ஜாலியாக நடனம் ஆடி அதை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது மனைவி யூடியூபில் வெளியிட்டார். இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி தேவி பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய தேவி பிரசாத், "வீடியோ எடுக்கப்பட்ட நாளில் தனது அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்தேன். அன்று எங்கள் திருமண நாள் என்பதால் என் மனைவி என்னுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்த வீடியோ வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
- டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் போக்கு சரியாக இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணியை அறிவித்தது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா தான். கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருக்கிறார். குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சொல்லி இருக்கிறார்.
எதிலே குறைந்தபட்ச செயல்திட்டம் வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். மொழிக்கொள்ளை, இருமொழிக்கொள்கை, கல்வி திட்டத்தில் தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை இப்படி பலவற்றில் எந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து வரப்போகிறது என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறது.
அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது. பல்வேறு நிர்வாகிகள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அங்கிருந்து விலகி வந்துவிட்டேன்.
சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள். இன்று நான் வந்து இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி கூட்டணியை அதுதான் முடிவு செய்யும். அந்த கட்சி தான் முடிவு செய்யும்.
அ.தி.மு.க.வில் அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அ.தி.மு.க. தலைமை உள்ளது.
ஒரு வேளை அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அதில் பா.ஜ.க. பங்கு எந்த அளவுக்கு இருக்கும், மத்திய அரசின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கும் இதையெல்லாம் யோசிப்பார்கள்.
இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனை இல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200-ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தொடர்ந்து கட்சி மாறிட்டோம் என்று சொல்வது தவறான வாதம். ஒரு இயக்கத்தில் இருக்கிறேன். அந்த இயக்கத்தில் சந்தோஷமாக இருந்தால் நிச்சயமாக மாற மாட்டேன். பிரச்சனைகள் வருகிறது. சந்தோஷம் இல்லை. புழுக்கத்திலேயே அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த இலக்கை நோக்கி செல்கிறோம்.
ஓ.பி.எஸ். உடன் தொடர்பு இருந்தது. இப்போது கிடையாது.
கூட்டி வரப்பட்ட கூட்டத்தை பார்த்து விட்டு இ.பி.எஸ். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால் ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதாவை போலவே தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ரக்ஷா பந்தன் அன்று தனது கையில் ராக்கி கட்டிய தங்கை முறை உறவு கொண்ட 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான சுர்ஜித் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவனது மாமாவின் மகள் சுர்ஜித்துக்கு ராக்கி கட்டிவிட்டுள்ளார். இதனையடுத்து இரவில் மது அருந்திய சுர்ஜித் போதையில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்னர் அவளது உடலை அந்த அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளான்.
அடுத்த நாள் தனது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியைடந்த அவளது அப்பா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
முதலில் இதை தற்கொலை என நினைத்த போலீசார் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களிடம் விசாரித்த போலீசார் முன்னுக்கு பின் முரணாக பேசிய சுர்ஜித்தை கைது செய்து விசாரித்தனர். பின்னர் சுர்ஜித் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.






