என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொய்யாக பாலியல் புகார் அளித்தால்... காவல்துறை எச்சரிக்கை
    X

    பொய்யாக பாலியல் புகார் அளித்தால்... காவல்துறை எச்சரிக்கை

    • தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
    • விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை என பொய்யாக போக்சோ புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    இதனையடுத்து, "போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .

    Next Story
    ×