என் மலர்
சினிமா
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’.
- இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது.

வாரிசு
இந்நிலையில், இப்படத்தின் ஜிமிக்கி பொண்ணு என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மன்தீப் ராய்.
- மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்தீப் இன்று காலமானார்.
கன்னட திரையுலகில் காமெடி நடிகராக அறியப்பட்டவர் மன்தீப் ராய் வயது 74. கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

மன்தீப் ராய்
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புலம் பெயர்ந்த அவர், பின்பு கன்னட திரைத்துறையில் நடிக்க தொடங்கினார். இதுவரை அவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அவற்றில் புஷ்பக விமானம், நாகரஹாவு, ஆப்த ரக்சகா, குரிகலு சார் குரிகலு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றவை.
- விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் வம்சி.
- திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இயக்குனர் வம்சி சாமி தரிசனம் செய்துள்ளார்.
2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான முன்னா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வம்சி. அதன்பின் பிருந்தாவனம், யுவடு படங்களை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து கார்த்தி, நாக சைத்தன்யா நடிப்பில் தெலுங்கில் ஊப்பிரி என்றும் தமிழில் தோழா என்றும் இயக்கியிருந்தார். தற்போது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

வம்சி
இந்நிலையில் இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த வம்சி, எல்லாருடைய அன்புக்கும் ரொம்ப நன்றி. வாரிசு படத்திற்காக நீங்க கொடுத்த அன்பு தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கு. நான் இங்க சாமி தரிசனம் பண்ண வந்தேன். தமிழ்நாடு மக்கள் என் மேல் இவ்வளவு அன்பு காட்டியதற்கு ரொம்ப நன்றி என்றார்.
- நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தவர் வினோத்.
- இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்த 29 வயதாகும் வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள மறைந்த வினோத்தின் இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வினோத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் பதான்.
- இப்படம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 25-ஆம் தேதி வெளியானது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பதான்
இந்நிலையில் பதான் படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் சுனில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜாக்கி ஷெராஃப்
இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இதற்குமுன்பு ஆரண்யகாண்டம், விஜய்யின் பிகில் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஜாக்கி ஷெராஃப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.
- வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை யோகி பாபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் - யோகி பாபு
இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்த யோகி பாபு, படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வாகனத்தை ஓட்டி செல்லும் விஜய்யின் பின்புறத்தில் அமர்ந்து யோகிபாபு ஜாலியாக பேசி கொண்டு செல்லும் இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
- நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இதனை ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ரஜினி
சில நிறுவனங்கள் பிரபலமடைய ரஜினி பெயர் , புகைப்படம் ,குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ரஜினி சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி இந்த பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- 'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

துணிவு
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

துணிவு
இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டத்தை தொகுத்து வழங்கியிருக்கும் இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WorldOfThunivu THE MAKiNG ?#Thunivu #ThunivuHugeBlockbusterworldwide ? #NoGutsNoGlory #Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures @mynameisraahul @ghibranofficial @shabirmusic pic.twitter.com/CAi28izgJw
— Boney Kapoor (@BoneyKapoor) January 28, 2023
- பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா, அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
- தற்போது இவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் பேரன் ஆவார். ஆந்திர மாநிலம் குப்பத்தில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியொன்றில் தாரகா ரத்னா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தாரகா ரத்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நந்தமுரி தாரகா ரத்னா
மேல் சிகிச்சைக்காக தாரகா ரத்னாவை பெங்களூரு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடக்கின்றன. தாரகா ரத்னா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகே அபாய கட்டத்தை தாரகா ரத்னா தாண்டுவாரா என்பதை சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

நந்தமுரி தாரகா ரத்னா
தாரகா ரத்னா உடல்நிலை குறித்து அவரது மாமாவும் நடிகருமான பாலகிருஷ்ணா கூறும்போது, ''தாரகா ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள்'' என்றார். 39 வயதாகும் தாரகா ரத்னா, 2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூர்யாவின் 42-வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42 படக்குழு
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

மிருணாள் தாகூர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகவுள்ளது. அதன்படி, சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் நடிகை மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த தகவலால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.