search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "பூஜா ஹெக்டே"

  • நடிகை பூஜா ஹெக்டே பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
  • இவர் கடைசியாக 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார்.

  தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தனது இரண்டாவது படமான 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பாலிவுட்டில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடைசியாக சல்மான் நடிப்பில் வெளியான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  பூஜா ஹெக்டே சமீபத்தில் கர்நாடகா கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் இவரின் காதல் குறித்து இணையத்தில் வதந்தி பரவி வருகிறது. அதாவது, மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

  ஆனால், இதுவரை அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த தகவலுக்கு பூஜா ஹெக்டே மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

  • நடிகை பூஜா ஹெக்டே முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.
  • இவர் நடித்த பல படங்கள் தோல்வியையும் சந்தித்தது.

  தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சீவியுடன் நடித்த 'ஆச்சார்யா' படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.


  தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் சரிவை சந்தித்து வருவதால் அவரை முன்னணி கதாநாயகர்கள் ஓரம் கட்டுகிறார்கள் என்றும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றை அவரது குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

  இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • நடிகர் விஜய் நேற்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
  • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

  நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்தனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


  இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே 'பீஸ்ட்' படப்பிடிப்பு தளத்தில் விஜய் குழந்தைகளுடன் 'புட்ட பொம்மா' பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.  • நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
  • இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

  தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


  பூஜா ஹெக்டே- சம்யுக்தா

  சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

  விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்திருந்த பூஜா ஹெக்டேவின் சூட்கேசை அவர் தொலைத்துள்ளார்.
  தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார். இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், பிரான்ஸில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட அவர் திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் விழாவில் முதன்முறையாக அவர் கலந்துகொள்கிறார். 

  பூஜா ஹெக்டே
  பூஜா ஹெக்டே

  இந்நிலையில் அவ்விழாவில் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளார் பூஜா. விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பூஜா ஹெக்டே தனது சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்ததால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது எனவும், இதனால் பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நேரம் பார்த்து இப்படி சூட்கேஸ் தொலைந்ததால் பூஜா மட்டுமல்லாது அவரது உதவியாளர்களும் உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் அடுத்த கட்ட ஏற்பாடு பற்றி தீவிரமாக யோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

  பூஜா ஹெக்டே

  பின்னர் ஒருவழியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தாராம் பூஜா ஹெக்டே. கேன்ஸ் நிகழ்ச்சியில் அவர் அணிவதற்குத் தேவையான விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு அவர் புறப்பட்டுள்ளார். பூஜா தனது சூட்கேஸ்களை ஒன்றை இந்தியாவில் தனது காரில் விட்டுச் சென்று உள்ளார். மேலும் ஒன்று பாரிஸில் தொலைந்து போய் உள்ளது. நல்லவேளையாக அவர் எடுத்துவந்த விலை உயர்ந்த நகைகள் அவரிடம் பத்திரமாக இருந்ததாம். இச்சம்பவத்தால் அவர் சற்று மனமுடைந்துள்ளார்.
  ×