search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minmini"

    • சென்னை- குஜராத் அணிகள் நேற்று மோதிய ஆட்டத்தை பார்க்கவும் 54 டிக்கெட்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியது மின்மினி.
    • மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்.

    சென்னை:

    உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் சமூக ஊடக செயலியான 'மின்மினி', சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னர் ஆகியுள்ளது. மேலும், ஹேஷ்டேக் மின்மினி சிஎஸ்கே என்கிற போட்டியை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. தற்போது நடந்து வரும் பரபரப்பான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பை 'மின்மினி' அதன் பயனாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதாவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே விளையாடும் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை வழங்குகிறது மின்மினி.

    இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு எளிதான சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி மின்மினி செயலியின் பயனர்கள் சி.எஸ்.கே அணி மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் மின்மினி செயலியில் வீடியோ பதிவிட வேண்டும். ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 30 நொடிகள் இருக்க வேண்டும், "#minminiCSK" என இந்த ஹேஷ்டேக் இடுவது கட்டாயம்.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சி.எஸ்.கே. ஆட்டங்களை நேரில் பார்ப்பதற்கு தலா இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும். அத்துடன் போட்டியை ஸ்டேடியத்தில் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெற்றியாளர்கள் எடுக்கும் வீடியோ மற்றும் போட்டோ என அனைத்தையும் மின்மினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைந்து பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

    கடந்த 22-ந்தேதி சி.எஸ்.கே. களமிறங்கிய முதல் போட்டியைக் காண மின்மினி நடத்தும் #MinMiniCSK மூலம் 54 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஐ.பி.எல் போட்டியின் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சியையும் சி.எஸ்.கே அணியின் அட்டகாசமான முதல் ஆட்டத்தையும் நேரில் காணும் வாய்ப்பை பெற்றனர். மேலும் சென்னை- குஜராத் அணிகள் நேற்று மோதிய ஆட்டத்தை பார்க்கவும் 54 டிக்கெட்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியது மின்மினி.

    மின்மினி மூலம் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்ற சேலத்தை சேர்ந்த ஹேமநாதன் என்ற பயனாளர் கூறுகையில், 'கிரிக்கெட்டின் தீவிர ரசிகனான எனக்கு இப்போது தான் முதல்முறையாக போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டோனியை களத்தில் பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இந்த வாய்ப்பை வழங்கிய மின்மினிக்கு நன்றி' என்று குறிப்பிட்டார்.

    இந்த போட்டியின் வெற்றியாளர்கள் சி.எஸ்.கே ஆட்டம் நடக்கும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்படுவார்கள், மின்மினி நடுவர்குழு வெளிப்படையான நடைமுறை மூலம் வெற்றியாளர்களை இறுதி செய்யும். மின்மினி சிஎஸ்கே என்ற இந்த போட்டி ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் முடியும் வரை நடைபெறும். எனவே மின்மினியின் பயனர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் தங்களது படைப்புத்திறன் மற்றும் தங்களது அணி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு போட்டியில் வென்று சி.எஸ்.கே ஆட்டங்களை நேரில் காணும் வாய்ப்பை பெறலாம்.

    மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். பல புதுமையான வழிகளில் எங்களது பயனர்களுக்கு ஆச்சரியமான அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்று மின்மினி செயலியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.

    சென்னை:

    உலகின் முதல் தமிழ் 'ஹைப்பர்லோக்கல்' செயலி என்கிற பெருமித அடையாளத்துடன் கடந்த ஜனவரி 22-ந்தேதி மின்மினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் மின்மினி செயலியை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் சிறப்பான விதத்தில் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது மின்மினி. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான அன்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியின் சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது மின்மினி.

    இதுகுறித்து மின்மினியின் செயல் துணை தலைவர் எஸ்.ஸ்ரீராம் கூறியதாவது:-

    இது எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான தருணம். சி.எஸ்.கே அணியுடன் இணைவதன் மூலம் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுடனும், குறிப்பாக தமிழக மக்களுடனும் இன்னும் நெருக்கமாக பயணிக்க போகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் எங்களது பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க திட்டமிட்டுளோம். ஆர்வமுள்ள பயனர்கள் சிஎஸ்கே அணியையும், வீரர்களையும் வாழ்த்தி #minminiCSK என்ற ஹேஷ்டாக்-உடன் வீடியோவை மின்மினியில் வெளியிட வேண்டும்.

    இந்த போட்டியில் பயனர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் வெளியிடப்போகும் அனைத்து வீடியோக்களையும் எங்கள் மின்மினி நடுவர் குழு பார்த்து பரிசீலனை செய்த பிறகு வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடக்கும் நாளிற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு நடுவர் குழு தேர்வு செய்த வெற்றியாளர்களின் விவரம் மின்மினி செயலியில் அறிவிக்கப்படும்.

    உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு அம்சத்தையும் மின்மினி செயலியில் கொண்டுவந்துள்ளோம். இதில் பயனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தலாம், பிற பயனர்களுடன் கலந்துரையாடலாம், பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம்.

    மின்மினி அனைவருக்குமான டிஜிட்டல் தளமாக செயல்படும் குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள், அங்கீகரிப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்கள், மேலும் எங்கள் அணியால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டி சேனல் நெட்வொர்க் குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான வாய்ப்பை மின்மினி வழங்குகிறது.

    இத்தனைக்கும் மகுடம் வைத்தது போல தற்போது சி.எஸ்.கே அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது, எங்களது இளம் மின்மினி குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.

    மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். சி.எஸ்.கே போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்களை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்மினி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பார்ட்னர்ஷிப் குறித்து சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், 'உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகியுள்ள மின்மினி செயலியுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு பல ஆச்சரியமூட்டும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்' என்றார்.

    • அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள்
    • டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்கள் தங்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, 'மின்மினி' என்ற செயலி உருவாக்கப்பட்டு இன்று (ஜனவரி 22) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் அரட்டையடிக்கலாம் (சாட் செய்யலாம்), தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

    மின்மினி குழுவால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மல்டி-சேனல் நெட்வொர்க்குகளை கொண்ட மின்மினி செயலியானது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கும், சிட்டிசன் ஜர்னலிஸ்ட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும்.

    சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன், டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை

    மின்மினியில், "அங்கீகாரம்" (Verified) என்ற நிலை பணம் கொடுத்து பெறப்படுவதில்லை. மாறாக கன்டென்ட்டின் தரம் மற்றும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் "ப்ளூ டிக்" மூலம் அடையாளம் காணப்படுவார்கள், எனவே பயனர்கள் நம்பகமான கன்டென்ட்டுகளை படிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதை உணரலாம்.

    காலப்போக்கில், இந்த தளத்தில் மற்ற பயனர்களுடன் தகுதியான உள்ளடக்கத்தை (கன்டென்ட்டுகளை) பகிர்ந்து, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் தனிப்பட்ட பயனர்கள் "அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்கள்" என மேம்படுத்தப்படுவார்கள்".

    இன்று நடைபெற்ற மின்மினியின் அறிமுக விழாவில் அதன் நிர்வாக துணைத்தலைவர் எஸ்.ஸ்ரீராம், தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "உலகளாவிய தமிழ்ச் சகோதரத்துவத்தை மட்டுமே மையமாக வைத்து மின்மினியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் பயனர்கள் செயலியின் தனித்துவமான பயன்பாட்டு அனுபவம் மற்றும் படைப்பாளர்களுக்கான பிற வருவாய் வாய்ப்புகளின் மூலம் நாங்கள் வழங்கும் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை பயனர்கள் பெறுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்".

    "ஹைப்பர்லோக்கல் கன்டென்ட் மற்றும் எங்கள் செயலியின் மூலம் நாங்கள் உருவாக்கும் இணைப்பைக் கருத்தில் கொண்டு மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்று அவர் மேலும் கூறினார்..

    தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள், எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் ஊழியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு, 'மின்மினி கடைகள்', என்ற அங்கீகாரம் அக்கடைகளுக்கு வழங்கப்படும். அக்கடைகள், டிஜிட்டல் பிசினஸிற்குள் கொண்டுவருவதுடன் மின்மினி செயலியிலும் லிஸ்ட் செய்யப்படுகிறது. அந்த கடைக்கு வழங்கப்பட்ட பிரத்யேக கியூ ஆர் கோடுகள் (QR Code) மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களை மின்மினி பயனர்களாக மாற்றும் பொழுது கடை உரிமையாளர்கள் வருமானம் பெறுவர். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம் (தாங்கள் செய்யும் தொழில் வாடிக்கையாளர்களை சென்றடைய, விளம்பரம் பெற விரும்பும் சேவை, பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து, இரங்கல் செய்தி என பல்வேறு விளம்பரங்களை புக் செய்யலாம்) ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம்.

    இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் காலப்போக்கில் கொண்டிருக்கும். எனவே பயனர்கள் அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான அதன் தனித்துவமான விளம்பரத் தொகுப்புகளுடன், மின்மினி பயனர்களை சென்றடையும் வழியையும் வழங்கும்.

    "தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலி மூலம் லிஸ்ட் செய்து அவர்களையும் டிஜிட்டல் பிசினஸிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்", என்றார்.

    "விளம்பரதாரர்கள் மற்றும் பிராண்டுகளுக்கு, எங்களின் தனித்துவமான பின்-கோடு மூலம், தமிழ்நாட்டின் கடைசி தாலுகா வரை கடைசி மைல் தூரத்தை சென்றடையும் வழியை மின்மினி வழங்கும்", என்று ஸ்ரீராம் கூறினார்.

    மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

    • இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மின்மினி’.
    • இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

    பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் 'மின்மினி' திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது.


    இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


    மின்மினி போஸ்டர்

    இந்நிலையில், 'மின்மினி' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.


    • இயக்குனர் ஹலிதா ஷமீம் 2015-ஆம் ஆண்டு 'மின்மினி' படத்தை இயக்கினார்.
    • 7 வருட இடைவெளிக்கு பிறகு கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை படமாக்கி வருகிறார்.

    பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான 'மின்மினி' திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015-ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார்.


    ஹலிதா ஷமீம்- கதீஜா ரகுமான்

    இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இதனை ஹலிதா ஷமீம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கதீஜா ரகுமான் ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
    • ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான “மின்மினி” படத்தின் படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது.

    பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.


    மின்மினி

    மின்மினி

    இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான மின்மினி திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015 ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆங்கர் பே ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

    மின்மினி

    மின்மினி


    இந்நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை ஹலிதா ஷமீம் மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் இப்படத்திற்காக எடுத்துக்கொண்ட புது முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    ×