search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மின்மினி ஆப்-ல் 3 நாட்கள் நடைபெறும் மின்மினி ஆஸ்ட்ரோ நிகழ்ச்சி
    X

    மின்மினி ஆப்-ல் 3 நாட்கள் நடைபெறும் "மின்மினி ஆஸ்ட்ரோ" நிகழ்ச்சி

    • மின்மினி ஆஸ்ட்ரோ என்ற நிகழ்ச்சி மே 29ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை மின்மினி செயலியில் நடைபெற்று வருகிறது.
    • பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பிரசன்ன ஜோதிடம் என்ற ஜோதிட முறையில் பதில் அளிப்பார்கள்.

    தமிழர்களுக்கான முதல் ஹைப்பர் லோக்கல் சோசியல் மீடியா என்கிற பெருமித அடையாளத்தோடு அறிமுகமான மின்மினி செயலியில், மின்மினி ஆஸ்ட்ரோ என்ற நிகழ்ச்சி மே 29ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை மின்மினி செயலியில் நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பிரசன்ன ஜோதிடம் என்ற ஜோதிட முறையில் பதில் அளிப்பார்கள். ஜோதிடர்கள், கேள்வி கேட்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தை கணித்து துல்லியமான பதில்களை வழங்குகின்றனர். அனைத்து விளக்கங்களும், பதில்களும் தெளிவுகளும் ஜோதிடர்களால் வழங்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, மின்மினி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து பயனராக பதிவு செய்யவேண்டும். அதன்பிறகு தங்களது கேள்விகளை வீடியோ வடிவில் மின்மினியில் பதிவிட வேண்டும்.

    இந்நிகழ்ச்சி குறித்து மின்மினியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், " மின்மினி ஆஸ்ட்ரோ நிகழ்ச்சியை பிரபல ஜோதிடர்களுடன் இணைந்து நடத்துகிறோம். ஜோதிடத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் #minminiastro என்ற ஹேஷ்டேகை உபயோகித்து வீடியோ பதிவாக மின்மினி செயலியில் போஸ்ட் செய்யலாம். உங்கள் கேள்விகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களது எதிர்காலம் தொடர்பான முக்கியமான கேள்விகள் எதுவாகினும் அவற்றை நீங்கள் வீடியோ வடிவில் கேட்கலாம்.

    மின்மினி நடத்தும் போட்டிகள் அனைத்திற்கும் மக்கள் பேராதரவு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். ஒரு சோசியல் மீடியா செயலி இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். எனவே இம்முறையும் இந்த முயற்சிக்கு மக்கள் தங்களது வரவேற்பையும், நல்லாதரவையும் அளிப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.

    Next Story
    ×