என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
7 வருட இடைவேளை.. மீண்டும் படத்தை துவங்கும் பிரபல இயக்குனர்
- சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்.
- ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவான “மின்மினி” படத்தின் படப்பிடிப்பு 7 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்குகிறது.
பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹலிதா ஷமீம். அதன்பின் சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார். இவர் இயக்கிய "புத்தம் புது காலை விடியாதா" என்ற ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான "லோனர்ஸ்" அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே இவர் இயக்கத்தில் தயாரான மின்மினி திரைப்படம் 2015-ல் தொடங்கப்பட்டது. இப்படம் குழந்தைகளாக இருந்து, இளம் வயதினராக மாறுபவர்களின் கதையாக உருவானது. இப்படத்தின் முதல் பகுதியான குழந்தை பருவ பகுதிகளை அவர் 2015 ஆம் ஆண்டில் படமாக்கினார் மற்றும் அவர்கள் வளர்ந்த தோற்றத்தைக் காண 7 வருட இடைவெளியை இப்படத்திற்காக எடுத்துக்கொண்டார். மின்மினி படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும், இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஆங்கர் பே ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படப்பிடிப்பை ஹலிதா ஷமீம் மீண்டும் தொடங்கியுள்ளார். இவர் இப்படத்திற்காக எடுத்துக்கொண்ட புது முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.