search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்புதேவன்"

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக இருந்தது. சிம்புதேவன் - வடிவேலு இடையேயான கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.



    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பதாக கூறப்படுகிறது. 


    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் விரைவில் துவங்க இருப்பதாக சிம்புதேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சிம்புதேவன் புதிய படமொன்றை தொடங்கினார். #Chimbudevan #VenkatPrabhu
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

    ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்குகிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Chimbudevan #VenkatPrabhu

    சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகம் படம் தொடங்குவதற்குள் சர்ச்சையாகிய நிலையில், வெங்கட் பிரபு கூட்டணியை வைத்து சிம்புதேவன் புதிய படமொன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. #Chimbudevan #VenkatPrabhu
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

    ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ச‌ங்கர். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் எல்லாம் ஒன்றுகூடி விவாதித்து, வடிவேலு இந்தப் படத்தில் நடித்துத் தர வேண்டும் அல்லது இதுவரை செலவான 9 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தன. இதிலும் சரியான தீர்வு காணப்படாததால் வடிவேல் நடிப்பதற்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.



    ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனையடுத்து இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், வேறொரு படத்தை இயக்கப் போகிறார் சிம்புதேவன்.

    இயக்குநர் வெங்கட்பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அதாவது 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து, ஒரு கதை நிகழ்வது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

    சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி, அஜய் மாஸ்டர் ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. #Chimbudevan #VenkatPrabhu

    ×