search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிப்பாளர்கள் சங்கம்"

    தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். #ProducersCouncil #Vishal #TFPC
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.

    நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க வளாகத்துக்கு வந்து, கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். 

    சங்கத் தலைவர் விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சுய லாபத்துடன் செயல்படுகிறார். இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டத்தை இன்னும் கூட்டவில்லை. பட வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக விஷால் அமைத்த குழு பாரபட்சமாக நடந்துகொள்வதால் பட வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது. கடந்த நிர்வாகம் சங்கத்துக்கு வைத்து சென்ற வைப்புத்தொகையில் மோசடி நடந்துள்ளது. பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடித்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைகளுக்கு பூட்டு போட்டனர். விஷால் உடனடியாக வரவேண்டும் என்று தொடர்ந்து போராடினார்கள். சங்கத்துக்கு பூட்டு போட்டு சாவியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். 



    தற்போது நடிகர் விஷால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘தயாரிப்பாளர் சங்க கணக்கு விவரங்கள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்கள் நினைப்பது நடக்காது. போராட்டம் நடத்தியவர்கள் ஏற்கனவே பொதுக்குழுவில் பிரச்னை செய்தவர்கள்’ என்று
     கூறியிருக்கிறார். #ProducersCouncil #Vishal #TFPC
    திருட்டு வி.சி.டியை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் தீபாவளிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பட அதிபர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Piracy #CCTV
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள் - வெளி அரங்குகள் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வருகிற நவம்பர் 6-ஆம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யப்பட வேண்டும். வருகிற நவம்பர் 15-ந் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது.

    இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவர். ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.



    திரைப்படத்தினை காணவரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

    தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி வி‌ஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும்

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Piracy #CCTV #ProducersCouncil

    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுடன் இணைந்து இசை ராஜா 75 என்று இசை திருவிழா நடத்த இருக்கிறார்கள். #ILayaraja
    இசைஞானி என்று பலராலும் போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரது இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள்.

    இந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.



    இந்த பிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது. #TFPC
    ×