search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கல்லூர், கீழ குளத்தூர், திருப்பெயர், மஞ்சமேடு, கரைவெட்டி பரதூர், வேட்டக்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பெரியமறை, அழகிய மணவாளன், மாத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணியில் இருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் 596 வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா முகாம்களில் ஆய்வு நடத்தினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாரண வாசி அரசு உயர்நி லைப்பள்ளி, கீழப்பழுவூர் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இம்முகாமானது அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 306 வாக்குச்சாவடி மையங்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 290 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 596 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.கலெக்டர் ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் ஜெயங்கொண்டம். தாசில்தார் கலியலூர் ரகுமான், தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் தனசேகர் மற்றும் குண்டவெளி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ஜெயங்கொண்டம் நேஷனல் தொழில் பயிற்று நிறுவனம் மாணவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக பேரணியில் கலந்துக் கொண்டு வாக்காளர் சுருக்க முறை திருத்தம்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாள தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது குறித்தும் அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளர் அடையாளத்தை பெறுதல் ,தொகுதி மாற்றம் செய்தல், ஆதார் அட்டை இணைத்தல் குறித்து பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு ஆரம்பித்து அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முந்திரி பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

    அரியலூர், 

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: அரியலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: அரியலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டரில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது முந்திரி கொட்டைக்கு விலையில்லாத தால் விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மானியத்தில் முந்தி ரிக்கு அணைப் போட்டு (கரை அமைத்து)கொடுக்க வேண்டும். முந்திரிக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும்.மக்காச்சோளம் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்: அரியலூர் மாவட்டத்தி லுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ)பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபா சங்கரி மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டி

    அரியலூர்,  

    அரியலூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

    போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற் றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் என்பன உள்ளிட்ட தலைப்பு களில் இன்றுவரை நடை பெறும் இப்போட்டி களில் 50 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி னர்.

    போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சிற்றம்பலம்,மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மலர்கொடி, ஆதிலட்சுமி, மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளரை சந்தித்து,இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர்,  

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரிக்கும், படைப்புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதில் மக்காச்சோள பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட முந்திரி, மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பில அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் செந்துறை சாலை ராம்கோ சிமென்ட் ஆலை நுழைவ வாயில் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடம் வரையிலான சுமார் 7 கி.மீ தூரத்துக்கு போட்டி நடைபெற்றது. சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகளுக்கு தனி, தனியே நடத்தப்பட்டது.

    இதில், அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ}மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றிப் பெறும் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக போட்டியை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் தேகளீசன் தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின், உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் போட்டியை நடத்தினர்.

    இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    ஜெயங்கொண்டம், நவ.24-

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் அருண்பிரசாத் (வயது 28). இவர் தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை.

    இதுகுறித்து அவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்ப–திவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின்படி இந்த வழக்கில், குற்றவாளியை கைது செய்ய ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

    விசாரணையில், சேலம் மாவட்டம், வீராணம் கிராமத்தை சேர்ந்த வீமனூர் தங்கராஜ் மகன் சரவணன்(19), மோட்டூர் கோவிந்தசாமி மகன் கோகுலகண்ணன்(19), கோரத்துப்பட்டி சுப்பிரமணியன் மகன் சந்திரன்(20) ஆகிய 3 பேரும், அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ஒரு மோட்டார் சைக்கிள், சுமை ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.
    • மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரியலூர்

    கூட்டுறவு சங்கங்களின் அரியலூர்மண்டல இணை பதிவாளர்தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூ ர்மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் துணைபயிற்சி நிலையம் 2023-2024-ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி பகுதிநேர மாற்றத்திற்குட்பட்ட கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள், கட்டணம், ரூ.100 இணையவழியில் செலுத்தி இந்த மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அரியலூர்மாவட்டத்தை சார்ந்த

    விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்குபவர் , பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆப்ரேட்டர் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

    தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். அப்படி முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    எனவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர், நவ.24-

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை அரியலூர் (ஒரு சில பகுதிகள்), கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி (ஒரு பகுதி), கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் தேளூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளிலும், உடையார்பாளையம் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும், உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி,

    இடையார் மற்றும் செந்துறை துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று அந்தந்த செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×