search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்"

    • தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது.
    • தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் இடையே பயணம் செய்ய ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

    மாநிலம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப் படாமல் இருக்கிறது. அதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகமான டிட்கோ இதற்கான பரிந்துரையை உருவாக்கி உள்ளது. தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை மத்திய அரசின் ஹெலிகாப்டர் கொள்கையை பயன்படுத்தி ஹெலிகாப்டர் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் வழங்கப்படும். அவசரகால சூழ்நிலையில் இந்த ஹெலிகாப்டர் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    • கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கலபுரகி நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
    • அங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவரான பி.எஸ்.எடியூரப்பா கலபுரகி நகருக்கு நேற்று ஹெலிகாப்டர் ஒன்றில் வருகை தந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அப்பகுதியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் ஷீட்டுகள், காகிதங்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் காற்றில் பறந்தன. இதனால் அந்தப் பகுதியே தூசு மண்டலம் போன்று காட்சியளித்து, தெளிவற்ற சூழல் காணப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதையறிந்து கொண்ட பைலட் ஹெலிகாப்டரை தரையிறக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின் அதிகாரிகள் அந்தப் பகுதியை தூய்மை செய்தனர். அதுவரை விமானி வானத்தில் பறந்தபடி இருந்துள்ளார். இதன்பின் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதனால் ஆபத்து எதுவும் ஏற்படாமல் எடியூரப்பா உயிர் தப்பினார். இதனால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர்.
    • எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என மாணவிகள் கூறினர்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர். மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

    கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

    விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது. குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வந்தார்.

    சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகை ஆயுதப்படை மைதானம் வந்து இறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

    அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.
    • இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது.

    பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இலகுரக போர் ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளது. இது 5.8 டன் எடையுள்ள இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர். ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுதங்களை இதில் பொருத்தி தாக்குதல் நடத்தமுடியும்.

    இந்த ஹெலிகாப்டர், உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடியது. இரவு நேரத்திலும், காடுகளிலும் பயன்படுத்தலாம். மெதுவாக பறக்கும் விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம் ஆகியவற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம்.

    இந்த ஹெலிகாப்டரில் பல்வேறு வகையான ஆயுதங்களை பொருத்தி ஏற்கனவே பலகட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப்படையில் இந்த ஹெலிகாப்டர் இன்று முறைப்படி சேர்க்கப்பட்டது. இதற்கான விழா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த விழாவில், இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    • ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு.
    • அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கம்.

    உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாரணாசிக்கு சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, ஆய்வுக் கூட்டமும் நடத்தினார்.

    பின்னர், வாரணாசியில் இருந்து லக்னோவிற்கு யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது, ஹெலிகாப்டர் வானில் பறந்தபோது எதிர்பாராதவிதமாக பறவை ஒன்று மோதியது. இதில் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அசம்பாவிதங்களை தடுக்க ஹெலிகாப்டரை உடனியாக வாரணாசியில் தரை இறக்கப்பட்டது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் கவுஷல்ராஜ் சர்மா தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #yogiadityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்காக கஸ்தூரிபா காந்தி பள்ளியில் உள்ள மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால், சில பிரச்சனை காரணமாக ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் இறக்கப்படாமல், அதற்கு 1 கி.மீ. முன்பாக உள்ள நிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நலமுடன் இருப்பதாகும், திட்டப்படி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் பாரகுலி கிராமத்தில் கொல்லப்பட்ட 3 பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #yogiadityanath
    ×