search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கொத்து"

    • மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை இன்று 12 -ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இதனை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்க ளும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசும்பணிகள், வகுப்பறைகளில் டேபிள்கள் வைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    இன்று காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக இரும்பு பெட்டிகள் மற்றும் தங்களுக்கு தேவையான உடைமைகளை பெற்றோர்களுடன் எடுத்து வந்ததையும் காண முடிந்தது. முன்னதாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். காலை முதல் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர். 

    இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தலைமை யாசிரியர் செல்வகுமாரி , உதவி தலைமைஆசிரியர் கலைவாணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட்டுகள் கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். மேலும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் பண்ருட்டி யிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் பாடப்புத்த கங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வரு கிறது.இதனைமுன்னிட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பட்டது.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (இன்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை மறுதினம்) பள்ள–கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கல்வித்துறையின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் இன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    2 மாத விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் கைகுலுக்கியும் வரவேற்றனர்.

    ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. கல்வியின் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு உணர்த்தி அவர்களின் கல்வியை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் ,காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர். விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வந்தனர். அவர்களை பெற்றோர்கள் பள்ளியில் விட்டு விட்டு வீடுகளுக்கு சென்றனர்.

    • சாயல்குடியில் தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன்- தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், மாநில இலக்கிய அணி செயலாளர் பெருநாழி போஸ், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, சாயல்குடி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர்கள் இதம்பாடல் மங்கள சாமி, காணிக்கூர் தென்னரசி, செல்லபாண்டியன், ஏ. புனவாசல் ராஜேந்திரன், செஞ்சடைநாதபுரம் லிங்கராஜ், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். வாகைக்குளம் ஜெயலட்சுமி, வடமலை மூக்கையூர் தொம்மை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எஸ்.வாகைகுளம் பால கிருஷ்ணன், டி.கிருஷ்ணாபுரம் இளங்கோவன், வாலிநோக்கம் வகிதாசகர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ் செழியன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சாயல்குடி ராஜேந்திரன், நரிப்பையூர் ராஜபாண்டியன், நரிப்பையூர் கோகுலம் மொபைல்ஸ் மருதுபாண்டியன், தி.மு.க. கிளைச் செயலாளர் குருவாடி சேதுராமன், மேலக் கிடாரம் குமாரராஜா, காலாகுளம் முருகேசன், ஆர்.சி.புரம் பிரான்சிஸ், பிரதிநிதி பழனிச்சாமி. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நாகரத்தினம், இளைஞரணி துணை அமைப்பாளர் நந்தகுமார், பிரமுகர் காலாகுளம் சேகர் உள்ளிட்ட தி.மு.க. கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வந்தார்.

    சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகை ஆயுதப்படை மைதானம் வந்து இறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

    அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    ×