என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்
    X

    கோவிலில் தரிசனம் செய்து விட்டு சிங்கப்பூர் அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம் வெளியே வந்தார்.

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
    • தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வந்தார்.

    சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகை ஆயுதப்படை மைதானம் வந்து இறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

    அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    Next Story
    ×