search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைவாய்ப்பு"

    • தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியனவையாக கருதப்படும்.

    தேசிய விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்களாக கருதப்படுவர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பின்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவர்.

    குறிப்பாக, 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும்.

    வீரர், வீராங்கனையர்கள் மேற்காணும் வழிகாட்டு தலின்படி 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவ தற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விளையாட்டு வீரர், வீராங்கனையர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய இணைப்புகளுடன் வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்து கொள்ளப்ப டுகிறது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
    • 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.

    மதுரை

    மதுரைபுறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் பொதும்பு, அதலை, அரியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு கூட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் பேசிய தாவது-

    காவிரி டெல்டா பகுதியில் 3 லட்சம் பயிர்கள் கருகி வருகிறது. காவிரி ஒழுங்காற்று ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. உச்சநீதி மன்றமும் தண்ணீரை விட வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இதை மதிக்காமல் தண்ணீர் தர மறுக்கிறது. இதனால் பயிர்கள் கருகி வேதனையில் விவசாயி இறந்த கொடுமை நடந்து வருகிறது.

    உலகம் பற்றி பேசும் உதயநிதி தற்போது மாநில அரசு உரிமையை மீட்க குரல் கூட எழுப்பவில்லை. இன்றைக்கு தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை குழி தோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. தமிழ்நாட்டி னுடைய இளைய தலை முறையின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடுமோ என்கிற மிகப்பெரிய அச்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.

    2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2026-ம் வரை 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தீவிர முயற்சி எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 185-இல் கூறப்பட்டுள்ளது.அதே போல் அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்கள் 187, 188, 189 கூறப்பட்டுள்ளது

    தற்போது முதல்-அமைச்சர் கடந்த 2ஆண்டு காலத்திலே 12 ஆயிரத்து 577 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கும், அடுத்த 2 ஆண்டுகளிலே 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்று 10,205 பேருக்கு அரசாணை வழங்கிய நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டு களில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவோம் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறு தியை ஒப்பிட்டு பார்க்கும் போது இது தோல்வி அடைந்து இருக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வீதம் 5ஆண்டுகளுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்பு என்று சொன்னார்களே அதுவும் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.

    இளைஞர் அணி மாநாடு நடத்த போகிறோம் என்று சொல்லி உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.

    இந்த மாநாட்டில் இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு என உத்தரவாதம் தரப் ்போகிறார்கள்? இளைஞர்களுக்கு கேள்விக் குறியாக இருக்கும் வேலைவாய்ப்பில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றும் வகையில், வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு அதில் இடம்பெறுமா? அறிவிப்பு அளிக்க உதயநிதி ஸ்டாலின் முன் வருவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 23-ந்தேதி நடக்கிறது
    • முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் அன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு அலுவலகம், மேலாளர், மாவட்ட தொழில் மையம், மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம், மேலாள், முன்னோடி வங்கி, மேலாளர், நபார்டு வங்கி, உதவி இயக்குனர், கதர் மற்றும் கிராம தொழில்கள், உதவி இயக்குனர், திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்த மாவட்டத்தில் ஏற்கனவே தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுயதொழில் தொடங்கிட ஆலோசனைகளை வழங்கு கின்றனர்.

    வங்கியிலிருந்து சுய தொழில் கடன்களை பெறுவதற்கும், மானியங்கள் பெறுவதற்கும் இந்த கருத்தரங்கு ஏதுவாக அமையும். சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்வழுத ரெட்டி யில் உள்ள இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கிகரிக்கப் பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்கும் அனைவரும் வேலை வாய்ப்புபெறலாம் என்று கல்லூரியின் தாளா ளர் செந்தில்குமார் தெரி வித்தார். முழுமையாக பயிற்சி முடித்த மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சான்றிதழ்வழங்கப் பட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தர படும். இருச்சக்கர வாகனம் பழுது பார்த்தல், உதவி எலெக்ட்ரீசியன் பணிக ளுக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது.10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வருகிற 23-ந் தேதி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் பள்ளி படிப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்றுள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
    • httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி ,என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், இத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.

    இம்முகாமில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை இத்திட்டத்தில் பயன்பெறாதவர்கள் அசல் வேலைவாய்ப்பு அடையான அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து வங்கிக்க ணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாற்றுத்திற னாளி அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

    தனியார் நிறுவனங்க ளில் பணியமர்த்த ப்பட்டாலோ அல்லது வேலைவா ய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெற்று வந்தாலோ அவர்களின் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. நெரிசலை தவிர்க்க முன்பதிவு அவசியம் என்பதால் httsshit.ly.sandidatetes2023 என்ற google form - ல் தங்களது சுயவிபரங்க ளை பதிவு செய்து இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருக்கும் வேலையளி ப்போர்கள் விபரம் அறிய hts/www.decctenkasi.com.mega jobfain:202 என்ற google link-ஐ பார்த்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    • புதிய தொழிற்பிரிவுகளிலும், நடைமுறையில் உள்ள பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன.
    • தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தஞ்சாவூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உடனடி சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நேரடிச் சோ்க்கைக்கான கடைசி தேதி வரும் 31 ஆம் தேதி ஆகும்.

    குறிப்பாக, இந்த ஆண்டு தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட 4.0 தொழில்நுட்ப மையத்திலுள்ள புதிய தொழிற் பிரிவுகளிலும், நடைமுறையில் உள்ள பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன.

    இப்பிரிவுகளில் பயின்று தோ்ச்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு ஒசூா், திருச்சி, மதுரை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

    சேர விரும்பும் அனைத்து மாணவா்களும் மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து அதே நாளில் சோ்க்கை ஆணை வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 9840950504, 9942424744 (தஞ்சாவூா்), 9443368131, 8946090864 (திருவையாறு), 9442579334, 9443736233 (ஒரத்தநாடு) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
    • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர், சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் ஆய்வாளர் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் விரைவில் நடத்த இருக்கின்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2 மற்றும் குரூப் -4 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான மாதிரி தேர்வு கள் வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் வினாக்களுக்கு மாதிரி தேர்வு எழுத விரும்பும் போட்டித் தேர்வாளர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள போட்டித்தேர்வு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
    • வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது, 

    கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் வருகிற 19-ந்தேதி நடைபெ றவிருந்த மாற்றுத்திறனா ளிக்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வங்கி கடன் மேளா நிர்வாக காரணங்களினால் வருகிற 26-ந்தேதி விருத்தா சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் கலந்து க்கொண்டு தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கட்டுபாட்டில் பணிபுரியும் திரிபுரகுமார், மாவட்ட திட்ட அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் தொடர்பு கொள்ள வேண்டும். 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ம் ஆண்டில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் வருகின்ற 19-ந்தேதி (சனிக்கிழமை) விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில், நடைபெற இருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்ேததி (சனிக்கிழமை) விருத்தா சலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .

    • தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19-ந்தேதி தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இப்பள்ளி வளாகத்தை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை ஆய்வு செய்தார். முகாமிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர, கழிப்பிட வசதி, சுகாதார வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்புத்துறை உதவி உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு செய்தார். மேலும். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் தனியார் நிறுவனங்கள் அமைக்க வேண்டிய அரங்குகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.

    இந்த ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் லூர்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்யராஜ், தாசில்தார் அந்தோணிசாமி, நகராட்சி கமிஷனர் பானுமதி, நகரமன்ற சேர்மன் சங்கவி முருகதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (11-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இத்தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்த குதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டவேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்டமாற்று த்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புறவாழ்வாதார இயக்கம் இணைந்து வருகிற 16- ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்றுத்திறனா ளிகளு க்கான சிறப்புதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இதில்தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்த குதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் அரசின் கடனுதவி பெறுவது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது. மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெ றுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×