search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு"

    • முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது.
    • முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெறுவது குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சலாவுதீன் தொடங்கி வைத்தார்.துணைமுதல்வர் சேக் முன்னிலை வகித்தார். எந்திரவியல் துறைத்தலைர் கணேஷ் வரவேற்றார். பன்னாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுதுறை மேலாளர் வேலு, பயிற்சி மேலாளர் பிரபு, தொழில்துறைப்பிரிவு மேலாளர் பழனி திருவேங்கடம், தொழில்துறைப்பிரிவு மேலாளர் ஹரி ஆகியோர் பேசினர். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் முகம்மது சதக் ஐ.டி.ஐ., ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 180 மாணவர்கள் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு எழுதினர். இதில் 126 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.19 ஆயிரத்து 500-டன் தங்குமிடம் வழங்கப்படும் என பன்னாட்டு நிறுவனத்தின் திறமை மேம்பாட்டுத்துறை மேலாளர் வேலு தெரிவித்தார். முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.

    • ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

    மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
    • வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் சசிக்குமார் தலைமை வகித்தார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியை ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக்ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் சீர்காழி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளியில் 12- வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கல்லூரியில் உள்ள நூலகம், வணிகவியல் துறை, அறிவியல் துறை, கணிதத்துறை வகுப்புகளுக்கு சென்று பாடம் கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாடங்கள் குறித்தும் விவரங்கள் செயல் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வி நிறைவடைந்து கல்லூரி படிப்பில் எந்த துறையை தேர்வு செய்து படிப்பது.

    வேலை வாய்ப்பு உள்ள துறையை தேர்வு செய்து கல்லூரி படிப்பில் சேர்வது உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் விளக்க ங்கள் அளித்தனர்.

    இதில் கல்லூரி பேராசிரியர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, பிரபாகரன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் வட்டார அளவில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய - கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற 28- ந்தேதி சனிக்கிழமை அன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே வாய்ப்பை சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • இணையதள முகவரியில் விண்ண ப்பிக்கு ம்படி கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவா க்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினைப் பெற்று புதியதாக தொழில் தொடங்க ஆர்வம் மிக்க தொழில் முனைவோர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்காண புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இத்திட்டத்தில் இந்த நிதிஆண்டு முதல் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான திட்டங்களும், சேவைத் தொழில்களுக்கு, ரூ.20 லட்சம் வரையிலான திட்டங்களும் அனுமதிக்கப்படும்.

    18 வயது பூர்த்தி அடைந்த படிக்காதவர்களும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறா தவர்களும் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறலாம்.

    உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேலும் சேவைத் தொழிலுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் திட்ட மதிப்பீடு இருந்தால் பயனாளி குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ரூ.2 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு பயிற்சி தேவையில்லை. ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு 5 நாட்களும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு 10 நாட்களும் நேரடியாகவோ இணையதளம் வாயிலாகவோ பயிற்சி பெற வேண்டும்.

    இம்மாவட்டத்திற்கான 2022-23 ஆம் ஆண்டிற்கான இலக்கு மாவட்ட தொழில் மையத்திற்கு 201 நபர்களுக்கு 585 லட்சம் மானியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்திற்கு 38 நபர்களுக்கு 110 லட்சம் மானியம், காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 74 நபர்களுக்கு 90 லட்சம் மானியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொழில் துவங்க ஆர்வ முள்ள தொழில்முனைவோர் கீழ்கண்ட இணையதள முகவரியில் விண்ண ப்பிக்கு ம்படி கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதியுடைய வையா கவும் தக்க ஆவணங்களு டனும் இரு ப்பின் பரிசீலனை க்குப்பின் இணையதளம் வாயிலாகவே வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். இணையதள முகவரி: www.kviconline.gov.in/pmegp

    மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகவும். தொலைபேசி எண்: 04342 230892, 89255 33941, 89255 33942, 89255 33940 ஆகிய தொலைபேசி எண்களிலும் அழைக்கலாம். இத்தி ட்டத்தின் மூலமாக ஆர்வமுள்ள தொழில் முனைவோர் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.= 

    • விருதுநகரில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ண ப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி க்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைஅளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பேச்சு
    • இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் சையத் சுலைமான் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஓ. ஜோதி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது, தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த மாணவ மாணவிகளின் திறனை அறிந்து பல்வேறு நிறுவனங்கள் மூலம் 3 மாதம் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது.

    பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்று நீங்கள் அனைவரும் வேலை வாய்ப்பினை பெற வேண்டும். தமிழக முழுவதும் இளைஞர்கள்அ னைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி வளர்ச்சி பெற்ற தமிழகம் உருவாக நம்முடைய முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.

    இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபால கிருஷ்ணன், வழக்கறிஞர் பாஷா, நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்திகேயன், கங்காதரன், திமுக இளைஞரணி துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
    • ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி.யில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்து, வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

    தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை இயக்குனர் வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில், தொழில்துறை அமைச்சர் கணேசன் பேசியபோது, சட்டமன்ற மானியக் கோரிக்கையில் கையில் ஒரு பேப்பர் கூட இல்லாமல் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பேசியவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரின் பக்கத்தில் அமரும் வாய்ப்பை பெற்றதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். காமராஜர், கருணாநிதி ஆகியோர் மதிய சத்துணவு திட்டத்தை கொடுத்தனர். ஆனால், உலகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். ஆட்சியேற்று ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம்.

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றார்.

    • பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது.
    • கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை வணிகர் தெரு பகுதியில் பகுதி சபா கூட்டம் இன்று நடந்தது.மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.

    பெருவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடை சரியாக செயல்படவில்லை. அங்கு பொது மக்களுக்கு 1½ லிட்டர் மண்எண்ணை தான் வழங்கப்படுகிறது. மோசமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    கோட்டை விளை பகுதியில் ரோட்டில் சாக்கடை விடப்படுகிறது. அங்கு கோவில் உள்ள பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெருவிளை பகுதியில் வரி வசூல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகைகள் தற்பொழுது வழங்கப்படவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறுகையில், பெருவிளையில் 10 நாளில் வரி வசூல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டவிளை பகுதியில் சாக்கடைகளை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    மேலும் அந்த பகுதியில் மழை நீர் தேங்காதவாறு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கலெக்டர் அரவிந்த் கூறுகையில், பெருவிளை ரேஷன் கடையில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உதவி தொகை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்பட வில்லை. ஆவணங்கள் முறையாக இருந்தால் உடனடியாக உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும்.

    பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வழங்க ப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்என்றார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அதை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கு முத்தாய்ப்பாக ஒவ்வொரு வார்டுகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பெயரில் தற்போது இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் இந்த கூட்டங்களில் உங்களது கருத்துக்களை தெரிவிக்க லாம். அந்த கருத்துக்களின் அடிப்படையில் உங்களது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது ரூ.5¾ லட்சம் கோடி கடன் இருந்தது. அதையும் சமாளித்து தற்பொழுது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை தூய்மைப்படுத்தும் பணியில் மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார்கள். இருசக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டு உள்ளார்கள். அதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொ ண்டு வருகிறோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். குமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    கூட்டத்தில் மண்டலத் தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் நிர்வாகி சிவ பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது.
    • இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.

    இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார்.

    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரெயில்வே, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறை, சுரங்கம், எண்ணை கழகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.

    இந்த துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக இன்று பிரதமர் மோடி பணி ஆணைகளை வழங்கினார்.

    ரோஜ்கர் மேளா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த 8 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கான அரசின் முயற்சிகளில் முக்கியமான மைல்கல். இன்று 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    100 ஆண்டுக்கால வேலையின்மை மற்றும் சுய வேலைவாய்ப்பு பிரச்சினையை 100 நாட்களில் தீர்க்க முடியாது.

    கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில் துறைக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவியால் 1.5 கோடிக்கும் அதிகமான வேலை இழப்புகள் தவிர்க்கப்பட்டது. உற்பத்தி, சுற்றுலா துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

    உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தத்தளிக்கும் நிலையில் அதனை இந்தியா சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்கிறது. இளைஞர்கள் சொந்த தொழில் செய்ய பயிற்சி மற்றும் கடன் அளிக்கப்படுகிறது. கிராம புறங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    இறக்குமதியை நம்பியிருந்த காலம் மாறி இந்தியா தற்போது ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    ×