search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு"

    • விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.
    • விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சென்னை:

    அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.என். மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் நாட்டில்கேஸ்டிங் இன்ஸ்பெக்சன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள 22 முதல் 26 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் உடை மேல் உள்வர்கள் மற்றும் 165 செமீக்கு மேல் உயரமுள்ள டிப்ளமோ எலக்டிரிகல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி எலக்ட்ரீசியன் படித்த ஆண் பணியாளர்கள், தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35,000 முதல் 39,000 மற்றும் விசா, உணவு, இருப்பிடம் விமான பயணசீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுபவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களை www.omcmanpower.tn.gov.in வலைதளம், தொலைபேசி எண்கள் (044-22505886/22502267 மற்றும் வாட்ஸ்ஆப் எண்.(9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
    • பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான், பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அமைக்கப்பட்டிருக்கின்ற சிப்காட் தொழில் பூங்காவைத் திறந்து வைத்து, பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினேன். சரியாக ஓராண்டு காலத்தில் துவக்க விழாவில் பேசுவதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

    மாநிலத்தில் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதுதான் இதற்கு முக்கியமான காரணம்.

    இங்கே பிசினஸ் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதும், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு எப்படித் திகழ்கின்றது என்பதற்கும் இது கண்கூடான சாட்சி.

    வளர்ச்சித் திட்டங்கள் என்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.



    தோல் மற்றும் காலணித் துறைகளை பொறுத்த வரைக்கும், இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியுள்ளது உங்களுக்கே அது நன்றாக தெரியும்.

    கடந்த ஆண்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-ஐ நான் வெளியிட்டேன். இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, இந்தத் துறையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது நமக்கெல்லாம் கண்கூடாகவே தெரிகிறது.

    இதுமாதிரியான வளர்ச்சியை பார்க்கும்போது, 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற நம்முடைய இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

    இந்தத் துறையில், நம்முடைய தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவேண்டும், இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்திட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    சிப்காட், சிட்கோ மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலம், 30-50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன் புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


    தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. "பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி" என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!

    பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்தத் திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த ஜே.ஆர்.ஒன் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ம் ஆண்டுக்குள், கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது.

    இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். உங்களைப் போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து தான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம்.

    உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள்.

    அதற்கு முன்பாகவே, பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் சிவசங்கர், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக் கட்டளை, ரோட்டரி நலச்சங்கம் மற்றும் எக்விடாஸ் அறக் கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். பி.கே.எம். அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார். உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் துணை ஆளுநர் சேகர் தலைவர் ராம் பிரகாஷ் செயலாளர் செந்தில் குமார் எக்விடாஸ் அறக்கட்டளை சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் துணை தலைவர் கிறிஸ்டோபர் மேலாளர் ராஜா, பிரபு பி.கே.எம். அறக்கட்டளை துணை செயலாளர் இளஞ்செழியன் துணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னாள் நிர்வாகி கள் ராஜா, ஜெயராஜ் அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், திருசெல்வி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

    • பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.
    • முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் பொதுச் செயலாளர் வினோத் தலைமையில் இளைஞர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டி பயிலரங்கு நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மாணவர்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆலோசனைகளை சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கந்தசாமி கலந்துகொண்டு கல்வி வேலை வாய்ப்பு தொழில் வழிகாட்டி குறித்து ஆலோசனை வழங்கினார்.

    முகாமில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் முதுநிலை மேலாளர் ஆனந்த நாராயண பிரசாத் சென்னை மாவட்ட தொழில் முனைவோர் பயிற்சியாளர் சசிகுமார் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இளஞ்செழியன் வழக்கறிஞர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் யாபேஸ், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன், வெற்றிச்செல்வன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட நர்சிங் படித்த மகளிர் விண்ணப்பம் செய்யலாம்.
    • இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி–ரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

    தமிழக அரசின் அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் சார்பாக செவிலியர் பணிக்காலியிட அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அதில் சவுதி அரே–பிய அமைச்சகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி–புரிவதற்கு குறைந்த–பட்சம் இரண்டு வருட பணி அனுப–வத்துடன் பி.எஸ்சி. நர்சிங் தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்ப–டுவதாகவும் சான்றி தழ்களில் சான்றொப்பம் பெற்றவர் கள் உடனடியாக விண்ணப் பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்படி பணியா–ளர்களுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளம், உணவுப்படி, இருப்பிடம், விமானப்பய–ணச்சீட்டு ஆகியவை அந் நாட்டின் வேலைய–ளிப்போ–ரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்படி பணிக்கு ராம நாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தில் 05.09.2023 அன்று காலை 10.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தால் பதிவு முகாம் நடைபெறுகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தி–னைச் சேர்ந்த தகுதியும் விருப்பமும் உடைய பி.எஸ்சி. நர்சிங் படித்த மகளிர் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் இம்முகா–மில் கலந்து கொண்டு தங்க ளது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமிற்கு வரமுடியாதவர்கள் தங்களு–டைய சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்படி வத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக் கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்கா–லியிடங்கள் குறித்த விவரங் கள் இந்நிறுவன வலைத்த–ளமான www.omcnanpower.com-ல் கண்டு பயனடை–யுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறார்கள். மேலும் ஊதி யம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறு வன தொலைபேசி எண்க ளின் (95662 39685, 63791 79200) (044-22505886, 044-22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் நாளை (26-ந்தேதி) விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டை, அனைத்து கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடு நர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பெண்கள் தொழில் பயற்சி பெற்றால் குடும்ப பொருளாதாரம் உயரும் என விருதுநகர் கலெக்டர் பேசினார்.
    • வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரை தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 4.0 தர தொழிற்நுட்ப மையத்தின் மூலம் செயல்படும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலை யங்களிலும் 2023-ம் ஆண்டிற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.

    இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை அதிக ரிக்கும் நோக்கில் "நமது தொழிற்பயிற்சி நிலை யத்தில் நமது சகோதரிகள்" விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.

    இந்நிகழ்ச்சியில் நவீன தொழில் பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில்நுட்ப மையங்களில் ஆய்வகங்கள், பணி மனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவி கள், அவர்களின் பெற்றோர் கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    தரமான கல்வியின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொழிற் பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பிற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பு களை காட்டிலும், தொழிற் பயிற்சி மையங்கள் தொழில் பயின்றோர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவு உருவாக்கி தந்துள்ளது.

    பெண்கள் தொழிற் பயிற்சி பயில்வதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று, தங்களுடைய பொருளா தாரத்தை உயர்த்துவதன் மூலம், தங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
    • காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 12.8.2023, 23.9.2023 மற்றும் 25.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக, 12.8.2023 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 -ம்வகுப்பு, 10 -ம்வகுப்பு, 12 -ம்வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடைய வர்களும் கலந்துக்கொண்டு பயன்பெற லாம். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 12.8.2023 (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 21-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 21-ந் தேதி (வெள் ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    முகாமில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந் துக் கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக் டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
    • தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் மந்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன் வரவேற்றார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் சிவாஜி, மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், கழக காப்பாளர்கள் ஆசைத்தம்பி, விடுதலை தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் வேட்ராயன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    தலைமைக் கழக அமைப்பாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.

    வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் போன்ற கோரிக்ககைளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என அரசு செயலாளர் கூறினார்.
    • இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட விவரம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி கள் மேற்கொள்ள வேண்டும்மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability Identity Card) வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வங்கிகளில் தொழில்கடன் பெறவும், அவர்களுக்கு இருப்பிடத்திற்கு அரு கிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்தி ட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

    முன்னதாக, சிவகாசி, சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளிக்கு சென்று, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

    18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மற்றும் அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார். தசைபயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    100 நாள்வேலை திட்டத்தில் பெண்களிடம், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, பெரியகோட்டை, வேம்பத்தூர், வி.புதுக்குளம் மற்றும் மிக்கேல்பட்டினம், கல்லூரணி, பாப்பாங்குளம், இந்திராநகர், லட்சுமிபுரம், அண்ணாநகர் ஆகிய பகுதியில்   அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் சுற்றுபயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளைகேட்டார்.     

    அப்பகுதியில் 100 நாள்வேலை திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த    பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 

    அப்போது குடிநீர் தட்டுப்பாடு   உள்ளதாகவும், எனவே தட்டுப்பாடுயின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை     எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

    அதற்கு பதில் அளித்த செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குடிநீர் பிரச்சனை குறித்து  மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

    அப்போது மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், வடக்கு  ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    ×