என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
    X

    2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

    • விருதுநகரில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ண ப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி க்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×