search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "placement"

    • உசிலம்பட்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக் கட்டளை, ரோட்டரி நலச்சங்கம் மற்றும் எக்விடாஸ் அறக் கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். பி.கே.எம். அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார். உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் துணை ஆளுநர் சேகர் தலைவர் ராம் பிரகாஷ் செயலாளர் செந்தில் குமார் எக்விடாஸ் அறக்கட்டளை சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் துணை தலைவர் கிறிஸ்டோபர் மேலாளர் ராஜா, பிரபு பி.கே.எம். அறக்கட்டளை துணை செயலாளர் இளஞ்செழியன் துணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னாள் நிர்வாகி கள் ராஜா, ஜெயராஜ் அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், திருசெல்வி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

    • சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் நாளை (26-ந்தேதி) விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்கள் அடையாள அட்டை, அனைத்து கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடு நர்கள் https://forms.gle/TH4R1Djmv8Z7SkpU என்ற கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்ற வர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
    • காலை 9 மணி முதல் 10 மணி வரை தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கணிதம், வணிக கணிதத்தில் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் எச்.சி.எல். பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த தேர்வு எழுதுவதற்கு https://forms.office.com/r/ZbCFbsMxGeஎன்ற லிங்கை பயன்படுத்தி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும். வருகிற 19-ந் தேதி அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, 20-ந் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 21-ந் தேதி காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 22-ந் தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.எம். மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடக்கும் அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், செல்போன் கொண்டு வர வேண்டும். தேர்வாகும் மாணவர் – களுக்கு பயிற்சி கட்டணம் வழங்கப்படும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முழுநேர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சாப்ட்வேர் டெவலப்பர், அனாலசிஸ்ட், டிசைன் என்ஜினீயர், டேடா என்ஜினீயர், சப்போர்ட் அன்ட் புரோசஸ் அசோசியேட் ஆகிய பணி வழங்கப்படும். பணியில் சேர்ந்ததும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வரை பெற முடியும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.= 

    • விருதுநகரில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ண ப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி க்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர்கள் வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    மதுரை

    மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரியில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா வரவேற்றார். 

    பி.எஸ்.ஒய். கல்வி குழும நிறுவனர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் 

    மதுசூதன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார். தொடர்ந்து 2021-2022

    கல்வியாண்டில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் நடந்த வேலைவாய்ப்பு போட்டி தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 100 -க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் வைரமுத்து ஆண்டறிக்கை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பழனிசாமி, முருகன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர்கள் வைரமுத்து, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×