search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus 2 students"

    • பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
    • காலை 9 மணி முதல் 10 மணி வரை தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு கழகம் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று கணிதம், வணிக கணிதத்தில் 60 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் எச்.சி.எல். பயிற்சியுடன் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இந்த தேர்வு எழுதுவதற்கு https://forms.office.com/r/ZbCFbsMxGeஎன்ற லிங்கை பயன்படுத்தி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தால் மட்டுமே தேர்வில் கலந்து கொள்ள முடியும். வருகிற 19-ந் தேதி அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, 20-ந் தேதி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 21-ந் தேதி காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 22-ந் தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை எஸ்.கே.எம். மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடக்கும் அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த தேர்வு பொருள் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    மாணவர்கள் தங்கள் அருகில் உள்ள தேர்வு மையங்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், செல்போன் கொண்டு வர வேண்டும். தேர்வாகும் மாணவர் – களுக்கு பயிற்சி கட்டணம் வழங்கப்படும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முழுநேர வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சாப்ட்வேர் டெவலப்பர், அனாலசிஸ்ட், டிசைன் என்ஜினீயர், டேடா என்ஜினீயர், சப்போர்ட் அன்ட் புரோசஸ் அசோசியேட் ஆகிய பணி வழங்கப்படும். பணியில் சேர்ந்ததும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வரை பெற முடியும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.
    • சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    மார்ச் 2-வது வாரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பெரும்பாலான மாணவர்களை தேர்வுக்கு ஒரு மாதம் முன்பே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தயார்படுத்தியுள்ளனர். ஒருபுறம் தேர்வு மையம் அமைக்கும் பணிகளும், மறுபுறம் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகளும் நடந்து வருகிறது.

    நன்றாக படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற செய்வதற்கான பணிகள் நடந்து வந்தாலும், தேர்வெழுத தகுதியான மாணவர்களில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் சூழலுக்கு ஏற்ப சிறப்பு வகுப்புகளை காலை, மாலை நேரங்களில் நடத்திக் கொள்ள மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

    அவ்வகையில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5 மணி முதல் 7:30 மணி வரை சிறப்பு வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடந்தாலும், பொதுத்தேர்வு தொடங்கும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வருவதால், ஒவ்வொரு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளியிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு துவங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனி ஆசிரியர் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சிரத்தை எடுத்து படித்து மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி கூறுகையில், மாலை, இரவு நேர வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்து வழங்கி வருகிறோம்.

    மாணவர்கள் பள்ளியில் இருந்து சிறப்பு வகுப்புகளுக்கு வரும் நேரம், வீடு சென்றடையும் நேரம் பெற்றோருக்கு அறிவுறுத்தி விடுவதால் பெற்றோரும் இரவு வரையிலான வகுப்புகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.100சதவீத தேர்ச்சியை பள்ளிகள் எட்டவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    • வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
    • அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

    சென்னை:

    தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலர்கள், பள்ளிக்கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு 2 நாட்கள் நடைபெறும் உள்ளுறைப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) சென்னையில் நேற்று தொடங்கியது.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய 3 இடங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    இந்தப் பயிற்சி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பகுதியில் உள்ள கல்லூரிகளில் என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும், உயர்கல்விக்கு வழிகாட்டுவது குறித்தும் என்.எஸ்.எஸ். அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

    இதையடுத்து இந்தப் பயிற்சியில் பங்குபெறும் ஒவ்வொரு என்.எஸ்.எஸ். அலுவலரும் தங்கள் கல்லூரியில் பயிலும் 30 என்.எஸ்.எஸ். மாணவர்களை இதற்கென கண்டறிவர்.

    இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஏற்ப 10 முதல் 15 என்.எஸ்.எஸ். மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவர். திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

    இதன்மூலம் அங்குள்ள உயர்கல்வி வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், ஆய்வகங்கள், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில் வருகிற 25-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.
    • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    உயர் கல்வி சேர்க்கையை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    நிகழாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர உள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும், உயர்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் முடிவுகளும் வர உள்ளன.

    இந்த நிலையில் பள்ளிகளில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை உயர்கல்வி சேர்க்கை குறித்த தகவல்கள், நுழைவுத்தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயில உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து இந்த 3 நாட்களும் உரிய ஆலோசனைகள் வழங்கி உதவ வேண்டும்.

    இதுதவிர கூடுதல் உதவிகளுக்கு அரசின் வழிகாட்டு மையத்தை 14417 என்ற எண் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆலோசனையின்போது மாணவர்களிடம் பதற்றம், கவலை, குழப்பம் போன்ற உணர்வுகள் தென்பட்டால் உடனடியாக 104 எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கிவிட வேண்டும். இந்த பணிக்கு அனுபவமிக்க தன்னார்வலர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.
    • வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ராஜ்பவன் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார்.

    வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் ராஜ்பவன் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார்.

    விழாவில் முதல் அமைச்சர் ரங்கசாமி பங்கேற்று ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 50 மாணவர்களுக்கு லேப்-டாப், 300 மகளிருக்கு புடவையும் வழங்கினார். விழாவில் ராஜ்பவன் முன்னாள் கவுன்சிலர் குமரன், குணா, ராஜ்பவன் தொகுதி வட்டார தலைவர் கோபிநாத், ராம், மலர்மன்னன், ஸ்ரீகாந்த், ராமதாஸ், ஆனந்த், பாபு, சுந்தர்பால், வினோத், சங்கர், முரளி, சக்திவேல், சுரேஷ், ஒயிட்டவுன் சங்கர், பார்த்திபன்,புகழேந்தி, மகளிர் அணியை சேர்ந்த கலைச்செல்வி, பத்மலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காலை 11 மணி முதல் 1 மணி வரை 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர் களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு தலைமை தாங்கி னார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ் வரி பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜய லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் சிறப்பு ரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக அரசின் சார்பில் திறமையான வழிகாட்டும் நபர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. அவர்கள் சொல்லும் தகவலை கேட்டு மாணவ,மாணவிகள் பயனடைய வேண்டும். எப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் திறமையான வர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கனவு கள் நம்மை தூங்க விடாது என டாக்டர் அப்துல்கலாம் சொன்னது போல மாணவ, மாணவிகள் உங்கள் எதிர்கால எண்ணங்களை கனவுகளாக மாற்றிக்கொண்டு அந்த கனவு நிறைவேறும் வரை குடும்ப சூழ்நிலை நினைத்துப் பார்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.

    படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் அவ்வாறு உங்கள் வாழ்க்கைத் தரம் மாறு வதற்காக மாணவர் களின் கண்களை திறக்கச் செய்யும் நிகழ்ச்சி தான் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு எனும் கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி களை அனைவரும் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    திருப்பூர்:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 20ந் தேதி வெளியிடப்பட்டது. இதனால், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவையாக உள்ளது. அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் துவங்கி உள்ளது.உடுமலையிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கையொப்பமிட்டு, சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

    பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், கல்லூரிகளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தற்காலிக சான்றிதழ் வாங்கிச்செல்கின்றனர் என்றனர்.

    பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைவதால் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையா க உயர்த்தும் பணியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் இந்த ஆண்டு லேப்-டாப் வழங்க முடியவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

    இதே போன்று விரைவில் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிளும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 25 ஆயிரம் மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டய படிப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 10 சதவீதம் பேருக்கு கண் பார்வை குறைபாடு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அவர்களுக்கு பரிசோதனை செய்து கண் குறைபாடிற்கான சிகிச்சையை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்.கே.ஜி.-யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது சமூக நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து நடைபெறும். இதில் மாணவர்களுக்கு முதல் பாடம் தமிழாகத்தான் இருக்கும். இரண்டாவது பாடமாக ஆங்கிலம் இருக்கும்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து வரும் வேளையில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 12 வகையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அந்த பயிற்சியால் படித்து முடித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிரியர்கள் குறித்து தமிழக முதல்வர் கூறியுள்ள கருத்து குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார். #TNMinister #Sengottaiyan
    ×