search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி: பிளஸ்-2   மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை
    X

    கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்லூரி கனவு எனும் வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி: பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர் களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு தலைமை தாங்கி னார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ் வரி பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜய லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் சிறப்பு ரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக அரசின் சார்பில் திறமையான வழிகாட்டும் நபர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. அவர்கள் சொல்லும் தகவலை கேட்டு மாணவ,மாணவிகள் பயனடைய வேண்டும். எப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் திறமையான வர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கனவு கள் நம்மை தூங்க விடாது என டாக்டர் அப்துல்கலாம் சொன்னது போல மாணவ, மாணவிகள் உங்கள் எதிர்கால எண்ணங்களை கனவுகளாக மாற்றிக்கொண்டு அந்த கனவு நிறைவேறும் வரை குடும்ப சூழ்நிலை நினைத்துப் பார்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.

    படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் அவ்வாறு உங்கள் வாழ்க்கைத் தரம் மாறு வதற்காக மாணவர் களின் கண்களை திறக்கச் செய்யும் நிகழ்ச்சி தான் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு எனும் கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி களை அனைவரும் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×