என் மலர்
இந்தியா

அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.. நாங்க தரோம் - பீகார் முதல்வர் வாக்கு
- 2020-25 இலக்கை இரட்டிப்பாக்குவதே எங்கள் குறிக்கோள்.
- நாட்டிலேயே அதிக வேலையின்மை விகிதம் உள்ள மாநிலங்களில் பீகார் ஒன்றாகும்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு பெரிய வாக்குறுதியை அளித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்று வாக்கு கொடுத்துள்ளார்.
"அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.. நாங்க தரோம் - பீகார் முதல்வர் ப்ராமிஸ் அரசு வேலைகள் மற்றும் பிற வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2020-25 இலக்கை இரட்டிப்பாக்குவதே எங்கள் குறிக்கோள். இதை அடைய, தனியார் துறையில், குறிப்பாக தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது" என்று குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இளைஞர்களை சுயதொழில் வாய்ப்புகளுடன் இணைக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க, ஜன்நாயக் கர்புரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை மாநில அரசு அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே அதிக வேலையின்மை விகிதம் உள்ள மாநிலங்களில் பீகார் ஒன்றாகும். வேலை வாய்ப்புகள் இல்லாததால் பீகாரிகள் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களுக்கு அதிகளவில் குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த 2015 முதல் தற்போதுவரை நிதிஷ் குமார் பீகாரின் முதல்வரின் முதல்வராக தொடர்வது என்பது குறிப்பிடத்தக்கது.






