search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார்துறை"

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இம்மாதம் நாளை (16-ந் தேதி) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தி லும் வேலைநாடும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ள லாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.

    முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற

    21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலி க்கப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழ ங்கப்ப டுகிறது. இந்த இணைய தளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவன ங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவை யான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைஅளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார்துறை மகளிர் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே 18- 20 வயது வரை உள்ள 2020, 2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு பயிற்சியுடன் மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். அந்த பதவிகளுக்கான நேர்காணல், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகிற 15- தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.

    இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் கல்விச்சான்றுடன், நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம். தனியார்துறை நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    ×