search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநியோகம்"

    • வைகை வறண்டதால் திருநகரில் விநியோகம் பாதிக்கப்பட்டது.
    • உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி பொதுமக்கள் கடந்த பத்து நாள்களாக குடிநீன்றி அவதிபடுகின்ற–னர்.

    சோழவந்தான் பகுதியை அடுத்த பன்னியான் சித்தை–யாபுரம் பகுதியில் வைகை ஆற்றில் 5 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், அமைதிசோலை நகர், நெல்லையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இப்பகுதிகளில் தண்ணீர் வருவதில்லை என பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. குடிநீர் இல் லாததால் இப்பகுதி பொது–மக்கள் தனியார் லாரிகளில் குடிநீர் குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள–னர்.

    மேலும் புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிய–டைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாந–கராட்சி நிர்வாகம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் வார்டு எண் 97, 98 மற்றும் 99-ல் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்கள் போதிய அளவு இல்லாததால், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சி தண்ணீர் வழங்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் என்ற மாநகராட்சியின் உறுதிமொழிக்கு மாறாக, ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகி–றது.

    வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கி–றது. கடந்த இரண்டு மாதங்க–ளில், எஸ்.மேட்டுத்தெரு, பள்ளர் மேட்டுத்தெரு, சக்கி–லியர் மேட்டுத்தெரு, கூடல் மலைத்தெரு, படப்பை மேட் டுத்தெரு ஆகிய பகுதி–களில் குடிநீர் விநியோகம் என்பது வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது.

    இதுதொடர்பாக அப்பகு–தியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் நல்ல மழை பெய்தபோதிலும், நீரேற்று நிலையங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை–களாலும், தண்ணீர் வரத்து குறைந்ததாலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போர் வெல் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    இந்த மூன்று வார்டுக–ளுக்கும் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்தாலும், இப்பகுதிகள் பலர் மாடி வீடுகளில் இருப் பதால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.

    மேலும் பக்கத்து தெருக்க–ளில் உள்ளவர்களும், வயதா–னவர்களும் நடக்க முடியாத நிலையில் தண்ணீர் பிடிக்க அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மூலக்கரை அருகே உள்ள பம்பிங் ஸ்டேஷனில் 2 மின் மோட்டார்களில் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதியில் நீர் அழுத்தம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி மேற்கு மண்டலத்தலைவர் சுவிதாவிமல் கூறுகையில், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வைகை கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகிப்பது தடை பட்டுள்ளது. தற்காலி–கமாக லாரிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.

    லாரிகள் செல்ல–முடியாத பகுதிகளில் சிறிய–ரக வாக–னங்களில் தன்னார் வலர் கள் மூலமும், எங்களது சொந்த செலவிலும் பொது–மக்களுக்கு குடிநீர் விநியோ–கம் செய்து வருகி–றோம். இதேபோல பொதுமக்கள் புழக்கத்திற்கு மாடக்குளம் மற்றும் மூலக்கரை பகுதியில் இருந்து தண்ணீர் விநியோ–கிக்கப்பட்டு வந்தது.

    அப்பகு–தியில் இருந்து மின்மோட்டார்கள் பழுது ஆனதால் தண்ணீர் விநியோ–கிக்க முடியமல் போனது. மின் மோட்டார்கள் சரி–செய்யப்பட்டு இன்னும் ஓரிருநாள்களில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பரங்குன்றம் பகு–திக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி–களில் தண்ணீர் தேக்கி வைத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற் றாக்குறையை சமாளிக்க முடியும் என்றார்.

    மாநகராட்சி உயர் அதி–காரி ஒருவர் கூறுகை–யில், மேற்கண்ட மூன்று வார்டுக–ளுக்கும் ஒரு நாளைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகவும், அதிகப்படியான தண்ணீரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு வழங்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்க–ளுக்கு மாற்று நாட்களில் திருநகரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும். மூலக்கரை பம்பிங் ஸ்டே–ஷனில் உள்ள 60 ஹெச்பி மோட்டார் பம்ப் அடுத்த இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என்று தெரி–வித்தார்.

    • சாலை விரிவாக்கப்பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 09.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் நாளை ( சனிக்கிழமை ) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம், அண்ணா சிலை, சாமந்தான் குளம், தென்கீழ் அலங்கம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்து ள்ளார்.

    • மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.
    • குடிநீர் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பிரிவில் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் குடிநீர்பெறப்பட்டு வருகிறது. இக்குடிநீர் திட்டத்தில் பாராமரிப்பு பணிகள்மேற்கொள்ளுவதால் 12.6.2023 அன்று குடிநீர் மாநகருக்கு வழங்க இயலாது என என்டிஏடிசிஎல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதனால் மாநகரில் 12.6.2023(திங்கட்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம்மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1,2,3 மற்றும் 4-க்குட்பட்டஅனைத்து வார்டு (1 முதல் 60 வரை) பகுதிகளில் 13.6.2023 ஒரு நாள் மட்டும்(செவ்வாய்க்கிழமை) குடிநீர் பகிர்மானத்தில் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 14.6.2023 ( புதன்கிழமை) முதல் மேற்கண்ட குடிநீர் பகிர்மானத்தில்தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர்மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். 

    • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .
    • சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை க்காக அனுப்பப்படும்.

    இது தவிர வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .

    இந்த நிலையில் இன்று தஞ்சையில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி லாரிகளில் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • நகராட்சி சார்பில் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது
    • குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று ஏற்பாடு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் கோடை காலம் தொடங்கிய நிலையிலும், குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகளின் காரணமாகவும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டுகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நேற்று முதல் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கியது. திருவள்ளுவர் நகர் கோல்டன் நகரில் அருகே லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதை பொதுமக்கள் வரிசையில் நின்று குடங்களில் பிடித்து சென்றனர். இதனை தஞ்சை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திலும், பல்வேறு திட்டப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    • நாளை கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மனி்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே ஏ.எஸ்.அன்பழகன் நகர், எஸ்.ஏ.ஆனந்தம் நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியத்தெரு, ஜெகநாதன் நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன் நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்ரஹாரம் கடைத்தெரு, பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கரந்தை மின் வழித்தடத்தில் உள்ள கங்காநகர், புண்ணியமூர்த்தி தோட்டம், அழகப்பா ரைஸ்மில், சிரேஷ்சந்திரம் ரோடு, வடக்கு வாசல், சத்தியா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்கட்டித்தெரு, கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகத்தில் வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை, உளுந்து, சோளம் விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு பருவத்திற்கு விதைப்பு செய்ய ஏற்ற நிலக்கடலை ரகங்கள் டி.எம்.வி 14, கதிரிலப்பாக்ஸி 1812, பிஎஸ்ஆர் 2, உளுந்து விதைகள் வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10, சோளவிதைகள்- கோ-32, கே-12 ஆகிய சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விதைகள் தேவைப்படும் விவசாயிகள் பரமத்தி வேளாண் விரிவாக்கம் மையத்தில் வாங்கி பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • குழந்தை ஏசு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் தஞ்சை அருளானந்தநகர், பிலோமினாள்நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலைய பகுதியில் நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்கத்திற்கு மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் மின் வழித்தடத்தில் உள்ள காவேரி கல்யாணமண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் மேரீஸ்கார்னர் மின்பாதையில் அருளானந்ததம்மாள் நகர் 1-வது தெரு வரை உள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர்-மேயர் வழங்கினர்
    • இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நாகர்கோவில்:

    பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

    20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    • கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை அடுத்த மருங்குளத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் , விவசாயிகளுக்கு மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறும் போது:-

    விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 10.5 லட்சம் எண்ணிக்கையில் கத்தரி நாற்றுகள், 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லி, எலுமிச்சை போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    • மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×