விசைப்படகில் சென்று மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்

மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
விசைபடகில் சென்று மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
விசைபடகில் சென்று மீனவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com