search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இதுவரை 10.5 லட்சம் கத்தரி நாற்றுகள் வினியோகம்
    X

    விவசாயிக்கு கத்தரி நாற்றுகள் வழங்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு இதுவரை 10.5 லட்சம் கத்தரி நாற்றுகள் வினியோகம்

    • 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    • கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை அடுத்த மருங்குளத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் , விவசாயிகளுக்கு மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறும் போது:-

    விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 10.5 லட்சம் எண்ணிக்கையில் கத்தரி நாற்றுகள், 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லி, எலுமிச்சை போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    Next Story
    ×