திருப்பூர் மாநகரில் 13-ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.குடிநீர் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் பிரிவில் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் குடிநீர்பெறப்பட்டு வருகிறது. இக்குடிநீர் திட்டத்தில் பாராமரிப்பு பணிகள்மேற்கொள்ளுவதால் 12.6.2023 அன்று குடிநீர் மாநகருக்கு வழங்க இயலாது என என்டிஏடிசிஎல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாநகரில் 12.6.2023(திங்கட்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் மூன்றாவது குடிநீர் திட்டத்தின் மூலம்மாநகருக்கு குடிநீர் வழங்குவது தடைபடும்.எனவே, திருப்பூர் மாநகராட்சியில் மண்டலம் 1,2,3 மற்றும் 4-க்குட்பட்டஅனைத்து வார்டு (1 முதல் 60 வரை) பகுதிகளில் 13.6.2023 ஒரு நாள் மட்டும்(செவ்வாய்க்கிழமை) குடிநீர் பகிர்மானத்தில் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.மேலும் 14.6.2023 ( புதன்கிழமை) முதல் மேற்கண்ட குடிநீர் பகிர்மானத்தில்தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என திருப்பூர்மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com