search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடற்புழு நீக்க மாத்திரை"

    • அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.
    • 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தினை முன்னிட்டு பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வினீத் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் திட்டத்தின் கீழ் "தேசிய குடற்புழு நீக்கும் தினம்" திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய 2.04 பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம் படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்ட்சோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

    காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரைமணிநேரம் கழித்து இம்மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இமமாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் நிலையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று முதல் வழங்கப்படும்.

    1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வரை வயதுடைய பெண்களுக்கு (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வரை)அல்பெண்டசோல் 1 மாத்திரைகள் வழங்கப்படும்.

    எனவே குழந்தைகள் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், மருத்துவ அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர்-மேயர் வழங்கினர்
    • இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நாகர்கோவில்:

    பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

    20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் தகவல்
    • விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி வழங்கப்படும்

    ராணிப்பேட்டை:

    தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 21-ந்தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. ராணிப்பேட்டை மாவட் டத்தில் 1 முதல் 19 வயதுடைய 2,94,284 நபர்களுக்கு அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகளிலும், 20 முதல் 30 வயதுடைய 76,493 பேருக்கு வீடு வீடாக சென்று அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராம, நகர சுகாதார செவிலியர்கள் மேற்பார்வையில் மொத்தம் 3,70,777 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த மாத்திரை உட்கொள்வதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்திட்டம் வெற்றிபெற முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். லேசான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடற்சோர்வு மற்றும் சிறு உடல்நல பிரச்சினை உள்ள குழந்தைகள் மற்றும் வேறு காரணங்களால் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 21-ந் தேதி அன்று மாத்திரைகள் வழங்கப்படும்.

    எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைவரும் இந்த மாத்திரை உட்கொண்டு பயனடைந்து நலமுடன் வாழ வேண்டும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • பொதுசுகாதாரத்துறை சார்பில் நாளை 14-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் நாளை 14-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. 1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத மற்றும் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கப்படுகின்றது.

    அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்ப டுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கி யம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,18,358 குழந்தைகளுக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,22,433 நபர்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

    இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும்.

    மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாண வர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்து ணர்வுடன் பங்கேற்கலாம். தகுதியுள்ள அனைவரும் இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரைகளை பெற்று

    உட்கொண்டு பயன்பெற லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

    மேற்கண்ட குறை பா டுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கை கழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகி யவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்ப டும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபா டுகளை நீக்கலாம்.

    இந்த வருடம் வருகிற 9-ந்தேதி அன்று 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வய திலுள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல் பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கைஎடுக் கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தினை முழுமையாக நல்ல முறையில் செயல்ப டுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித் துறை மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து செயல் பட அறிவுறுத்தப்பட்டுள் ளனர். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற் றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரி யில் பயிலும் மாணவர் களுக்கு கல்லூரியில் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பள்ளி கும், 20 வயது முதல் 30 வயது உள்ள பெண்கள், கல்லூரி செல்லா பெண் களுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் 9 மணி முதல் 2 மணி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்த மாத்தி ரையை கடித்து சுவைத்து சாப்பிடவேண்டும்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 6,19,455 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 75,043 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 94 ஆயிரத்து 498 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்தி ரைகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நல்ல முறையில் செயல்படுத்தும் விதமாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அனைத்து துறைகளையும் சார்ந்த அலுவலர்களின் ஒருங் கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது.

    இம்மாத்திரைகள் உட் கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்ப டுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் வருகிற 9-ந்தேதி அன்று உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கு 16-ந்தேதி அன்று மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதி படுத்தி அவர்களது நல் வாழ்விற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    ×