search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் அவதி"

    • ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அத்தாணி அந்தியூர் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம், கோவை, கேரளா மாநில த்துக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது.

    இதனால் இந்த வழியாக தினமும் கார், வேன், பஸ், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    மேலும் இந்த வழி அரசு உயர்நிலை பள்ளிக்கும், அரசு பணி மனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தட்டுதடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் எதிர்பாராமல் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் வந்து கீழே விழும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

    மேலும் இந்த பள்ளத்தால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
    • அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது.

    பொன்னேரி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    சில நாட்கள் பனியின் தாக்கம் குறைந்து இருந்தாலும் மீண்டும் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பனியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பனிமூட்டம் அதிகம் இருந்தது.

    அதிகாலையில் சாலையே தெரியாத அளவுக்கு புகைபோல் பனி படர்ந்து காணப்பட்டது. சாலையில் முன்னால் மற்றும் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி காணப்பட்டது. காலை 8 மணி வரை பனியின் தாக்கம் இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. காலை 8 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • சென்னை வில்லிவாக்கம் ரெட்ஹில்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
    • வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் உள்ள குண்டும் குழிகளில் வாகனங்கள் சிக்கி தடுமாறிச் சென்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை வில்லிவாக்கம் ரெட்ஹில்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்க பாதை 440 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய சுரங்கப்பாதை ஆகும்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கபாதையில் கொளத்தூர், மாதவரம், ரெட்ஹில்ஸ் பகுதிகளுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகில் உள்ள 'லெவல்கிராசிங்' பகுதியில் மேம்பால பணி நடைபெற்று வருவதையொட்டி தற்போது இந்த சுரங்கப்பாதையின் வழியாக தினமும் வாகன போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் வில்லிவாக்கம் சுரங்கப்பாதையில் உள்ள குண்டும் குழிகளில் வாகனங்கள் சிக்கி தடுமாறிச் சென்று வருகின்றன.சுரங்க பாதையின் சுற்றுசுவர் வழியாக தண்ணீர் கசிவினால் சேறும், சகதியுமாக உள்ளது.

    இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பல பள்ளங்கள் உள்ளன. அதில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் தடுமாறி விழுந்து பலர் காயம் அடைந்து வருகிறார்கள்.

    எனவே இந்த சுரங்கபாதையை உடனடியாக பழுது பார்த்து அங்குள்ள குண்டும், குழிகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வில்லிவாக்கம் சுரங்கபாதையில் பல ஆண்டுகளாக் சீரமைப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் குண்டும் குழிகள் அதிகம் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் ஒரு சில 'பேட்ச்'வேலைகளை மேற் கொள்கின்றனர். ஆனால் அது குறுகிய ஆயுட்காலம் கொண்டது.

    இந்த சுரங்கப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் மீண்டும் உடைந்து குண்டும் குழியுமாகிறது.

    இந்த சுரங்கப்பாதையில் தினமும் பல வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகிறார்கள். சுரங்கப் பாதையின் ஓரங்களில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.

    வில்லிவாக்கம் சுரங்கப் பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. பள்ளங்களில் வாகனங்கள் சிக்குவதாதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் தரமற்ற 'பேட்ச்'ஒர்க் பணிக்கு பதிலாக நிரந்தர தீர்வு வேண்டும்.

    சுரங்கப்பாதையின் தெற்கு பகுதியில் உள்ள சாலையை அவசரமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். இங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இப்பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சுரங்கபாதையை சீரமைக்க டெண்டர்விடும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது22). இவர் நேரு வீதி அருகே விவேகானந்தர் தெருவில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம்மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் ஒருவர் முபாரககின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    எப்பொழுதும் பரபர ப்பாக காணப்படும் இந்த சாலையில் மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி விட்டு சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில்சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து உள்ளனர். 

    • மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
    • முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம், பாரதி சாலை, அண்ணா மேம்பாலம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்ததால் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

    எனவே கடலூர் செம்மண்டலம் வழியாக கம்மியம்பேட்டை ஜவான்பவன் பைபாஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை வழியாக கனரக வாகனங்கள் பஸ் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டி பாலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் வழியாக அனைத்து கனரக வாகனங்களும், பஸ்களும் கடலூர் பஸ் நிலையத்திற்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தினந் தோறும் சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.

    இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக பஸ்கள் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் பகுதிக்கு மிக முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு வரப்பிரசாதமாக அமைந்த சரவணா நகர் இணைப்பு சாலை தற்போது பல்லாங்குழி போல் குண்டு குழியுமாக காட்சியளித்து வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள குண்டு குழியுமான சாலையில் செல்லும்போது மிகுந்த அவதி அடைந்து வருவதோடு அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது.

    இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் எளிதாக விபத்து ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர் இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் மற்ற நேரங்களில் ஏதேனும் பாதாள சாக்கடை குழாய் அடைத்துக் கொண்டால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் அடிக்கடி குண்டு குழியுமாக ஏற்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் முறையாக வடிகால் வாய்க்கால் அமைத்து சரவணா நகர் இணைப்பு சாலையை முக்கியசாலையாக அதிகாரிகள் கருதி அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    தற்போது குண்டு குழியுமான சாலை நாளடைவில் அந்த பகுதியில் சாலைகளே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியே சென்றாலும் அவர்கள் தவறி விழும் நிலையில் இந்த சாலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிடம் கேட்ட போது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சரவணன் நகர் இணைப்பு சாலை 780 மீட்டர் நீளம் கொண்டது. தற்போது பெரியளவில் குண்டும் குழியுமாக சாலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதை எங்களுக்கு தொடர்ந்து புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் கீழ் சேதமடைந்த சாலையை 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் விரைவில் நிதி பெறப்பட்டு உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.
    • கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் நடந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏதோ கலெக்டர் உத்தரவு போட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து அபராதம் விதித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதும் கிடையாது. இதனால் தொடர்ந்து மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அலட்சிய போக்கு காட்டி வருவதாலும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை கண்டும் காணாமல் இருப்பதால் மாடுகளை வளர்க்கும் நபர்கள் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்ப்பது இல்லை என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அங்கேயே படுத்து கொள்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவுகளை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
    • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

    • தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
    • எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாகதான் இருக்கும்.

    அந்த வகையில் தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

    கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, திருவொற்றியூர், மாதவரம், புழல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

    எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    • 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது .
    • முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது . இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடியது.

    பண்ருட்டி - சென்னை சாலையில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோண ம்சாலையில் கொ ள்ளு காரன்குட்டைவரையிலும் கனமழை காரணமா ககுண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது.  எல்.என்.புரம்,கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில்அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் .
    • மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இவ்வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.  இது மட்டும் இன்றி கடலூர் அருகே சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடலூரில் இருந்து சிதம்பரம் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டு மானால் செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்

    கடந்த சிலநாட்களாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் உருக்குலைந்தது. இதன் காரணமாக பிரதான முக்கிய சாலையாக இருந்து வரும் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள செல்லங்குப்பம் முதல் பச்சையாங்குப்பம் வரை சாலைகள் முழுவதும் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றது‌. தற்போது மழை கணிசமாக குறைந்து வெயில் அதிகரித்து காணப்படுவதால் சாலைகள் முழுவதும் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மண்கள் முழுவதும் பறந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

    இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் போது மண்கள் சிதறி முகத்தில் அடிப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகின்றது‌. மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விரைவில் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

    இது மட்டும் இன்றி சென்னை நாகப்பட்டினம் பிரதான சாலை என்பதால் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சென்று வருவதற்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக செல்ல க்கூடிய அனைவருக்கும் கடும் உடல் வலி ஏற்படுவதோடு வாகனங்கள் முழுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அடிக்கடி டயர்கள் பஞ்சராகும் நிலையையும் ஏற்பட்டு உள்ளது.

    ஆனால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல் மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் மேலும் அதிகாரிகள் முதல் கட்டமாக சாலையை முழுமையாக போடா விட்டாலும் பரவாயில்லை தற்சமயத்திற்கு சாலை சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்வார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பிரதான சாலையாக இருந்து வரும் இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
    • பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் துவங்கி அன்னூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருப்பூர் மாநகராட்சி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு எஸ்.எம்.நகர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்க 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழியை மூடாமல் விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அந்த குழி இருந்து வருகிறது. வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையான இந்த சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். குழியால் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்படுவதற்கு முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்
    • சாலையோரத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    கரூர்

    தோகைமலை பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தோகைமலை பஸ் நிலையத்திற்கு தென்புறத்தில் சாலையோரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மீது தேங்கி நிற்கும் மழைநீர் படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதியும், தேங்கி மழைநீரை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

    ×