என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி 4 முனை சந்திப்பில் கன மழை காரணமாகவாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்ற காட்சி.
பண்ருட்டியில் அதிகாலையில் கனமழை: சாலையில் குளம்போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
- 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது .
- முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் இன்று அதிகாலை 4 மணி முதல் தொடங்கி 2 மணி நேரம் கனமழை பெய்தது . இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளை நீராக பெருக்கெடுத்து ஓடியது.
பண்ருட்டி - சென்னை சாலையில் கண்டரக்கோட்டை வரையிலும், பண்ருட்டி-கும்பகோண ம்சாலையில் கொ ள்ளு காரன்குட்டைவரையிலும் கனமழை காரணமா ககுண்டும் குழியுமான சாலையில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாகி உள்ளது. எல்.என்.புரம்,கும்பகோணம் ரோடு ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. நகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில்அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.