search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A man-swallowing sinkhole"

    • மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
    • முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம், பாரதி சாலை, அண்ணா மேம்பாலம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்ததால் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

    எனவே கடலூர் செம்மண்டலம் வழியாக கம்மியம்பேட்டை ஜவான்பவன் பைபாஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை வழியாக கனரக வாகனங்கள் பஸ் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டி பாலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் வழியாக அனைத்து கனரக வாகனங்களும், பஸ்களும் கடலூர் பஸ் நிலையத்திற்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தினந் தோறும் சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.

    இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக பஸ்கள் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் பகுதிக்கு மிக முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு வரப்பிரசாதமாக அமைந்த சரவணா நகர் இணைப்பு சாலை தற்போது பல்லாங்குழி போல் குண்டு குழியுமாக காட்சியளித்து வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள குண்டு குழியுமான சாலையில் செல்லும்போது மிகுந்த அவதி அடைந்து வருவதோடு அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது.

    இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் எளிதாக விபத்து ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர் இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் மற்ற நேரங்களில் ஏதேனும் பாதாள சாக்கடை குழாய் அடைத்துக் கொண்டால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் அடிக்கடி குண்டு குழியுமாக ஏற்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் முறையாக வடிகால் வாய்க்கால் அமைத்து சரவணா நகர் இணைப்பு சாலையை முக்கியசாலையாக அதிகாரிகள் கருதி அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    தற்போது குண்டு குழியுமான சாலை நாளடைவில் அந்த பகுதியில் சாலைகளே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியே சென்றாலும் அவர்கள் தவறி விழும் நிலையில் இந்த சாலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிடம் கேட்ட போது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சரவணன் நகர் இணைப்பு சாலை 780 மீட்டர் நீளம் கொண்டது. தற்போது பெரியளவில் குண்டும் குழியுமாக சாலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதை எங்களுக்கு தொடர்ந்து புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் கீழ் சேதமடைந்த சாலையை 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் விரைவில் நிதி பெறப்பட்டு உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.

    ×