திண்டிவனம் நகரில் மோட்டார் சைக்கிளை திருடும் மர்ம கும்பல்

தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.
மோட்டார் சைக்கிள் திருடி செல்லும் மர்ம நபர் குறித்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சி.
மோட்டார் சைக்கிள் திருடி செல்லும் மர்ம நபர் குறித்து கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சி.
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது22). இவர் நேரு வீதி அருகே விவேகானந்தர் தெருவில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம்மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் ஒருவர் முபாரககின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

எப்பொழுதும் பரபர ப்பாக காணப்படும் இந்த சாலையில் மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி விட்டு சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில்சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com