search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incessant rain"

    • மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் நாள் இரவு பகல் பலத்த மழை பெய்தது.
    • தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் லேசான சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசிவருகிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் நாள் இரவு பகல் பலத்த மழை பெய்தது அதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் லேசான சாரல் மழையுடன் காற்று வேகமாக வீசிவருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே மரகிளைகள் விழுந்துக்கிடகின்றது.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் வாட்டி வைக்கிறது.

    பொதுவாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஏற்காடு அண்ணா பூங்கா சாலை படகு இல்ல சாலைகள் சுற்றூலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் படகு இல்லத்தில் படகுகள் நீரில் மூழ்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. குளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை மலை பாதையில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது மின்சார வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று காலை மலை பாதை 18-வது கெண்டை ஊசி வளைவு அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

    • செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர் .
    • மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது

    கடலூர்:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இவ்வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.  இது மட்டும் இன்றி கடலூர் அருகே சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடலூரில் இருந்து சிதம்பரம் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டு மானால் செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்

    கடந்த சிலநாட்களாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் உருக்குலைந்தது. இதன் காரணமாக பிரதான முக்கிய சாலையாக இருந்து வரும் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள செல்லங்குப்பம் முதல் பச்சையாங்குப்பம் வரை சாலைகள் முழுவதும் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகின்றது‌. தற்போது மழை கணிசமாக குறைந்து வெயில் அதிகரித்து காணப்படுவதால் சாலைகள் முழுவதும் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் மண்கள் முழுவதும் பறந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

    இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிய அளவிலான வாகனங்கள் செல்லும் போது மண்கள் சிதறி முகத்தில் அடிப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகின்றது‌. மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விரைவில் மூச்சு திணறல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

    இது மட்டும் இன்றி சென்னை நாகப்பட்டினம் பிரதான சாலை என்பதால் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இந்த சாலையில் சென்று வருவதற்கு மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக செல்ல க்கூடிய அனைவருக்கும் கடும் உடல் வலி ஏற்படுவதோடு வாகனங்கள் முழுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டு அடிக்கடி டயர்கள் பஞ்சராகும் நிலையையும் ஏற்பட்டு உள்ளது.

    ஆனால் சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல் மழை பெய்த காரணத்தினால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் மேலும் அதிகாரிகள் முதல் கட்டமாக சாலையை முழுமையாக போடா விட்டாலும் பரவாயில்லை தற்சமயத்திற்கு சாலை சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்வார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பிரதான சாலையாக இருந்து வரும் இந்த சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையில் தொடரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்று சாலை சேதமடைந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து ராஜபாளையம் சாலை சந்திப்பு வரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை போடப்பட்டது.

    இந்த நிலையில் திருமங்கலம் - மதுரை நெடுஞ்சாலையில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் எதிரில் போடப்பட்ட சாலை மழை நீர் வடிகால் கால்வாயைவிட 2 அடி கீழிறக்கி சாலை போடப்பட்டுள்ளது.இதனால் சிறிது அளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியது.

    பள்ளமான இடம் என்பதால் மழைநீர் தேங்கியதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறை, நகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்று சாலை சேதமடைந்தது.

    இதில் ஆங்காங்கே சாலையில் குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகியது.

    இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாததால் 3 பெண்கள், நகராட்சி ஊழியர் உட்பட 5 பேர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த போது தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

    உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×