search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் பனிப்பொழிவு"

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு காணப் பட்டது. சாலை களில் மூடுபனி சூழ்ந்தது.

    திருச்சி, துறையூர், சேலம், மோகனூர், திருச்செங்கோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சூழந்த மூடுபனியால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிமூட்டம் காணப் பட்டதால் விபத்தை தடுக்கும் வகையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் வேலைக்கு செல்வோரும் அவதிப் பட்டனர்.

    • இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்/

    கடலூர்:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.  கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது  ஆனால் இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி, வடலூர் ,கும்பகோணம், தஞ்சை செல்லும் சாலை, பண்ருட்டி -சென்னைசாலை, பண்ருட்டி-கடலூர்சாலை, பண்ருட்டி சேலம் சாலை, பண்ருட்டி - அரசூர் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றதுனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.  மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி பகுதியில் இன்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது  இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்  ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ெரயில்கள் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்து சென்றன. இதேபோல் சிதம்பரத்திலும் இன்று அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் தெரியாத வகையில் பனிப்பொழிவு காணப்பட்டது.புவனகிரி பகுதியிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

    • தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

    காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. காலை 9 மணி வரை மூடுபனி நீடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    கடந்த சில தினங்களாக அதிகாலையில் மட்டுமின்றி, காலை 8 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
    • பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    அரூர்,

    தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த மூன்று நாட்களாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனி பொழிவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் மொரப்பூர் தீர்த்தமலை கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    அதிகாலை போலவே காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு போடப்பட்டு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    • மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும்.
    • தேசியநெடுஞ்சாலையில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருவதால் இங்குள்ள ஆறு, குளம், ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வழிகிறது. பொதுவாக ஆண்டுதோறும் மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு பெய்யும் மாதமாகும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியேகடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பனிப்பொழிவு தொடக்கத்தில் மிதமான நிலையில் இருந்தது. அடுத்து படிப்படியாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. வாகன ஓட்டிகள் அவதி கடந்த சில தினங்களாக இரவு 7 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு விடிய, விடிய கடுமையாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிற்குள் முடங்கிய நிலையில் உள்ளனர். இன்று வழக்கம் போல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பண்ருட்டிவழியாக தேசியநெடுஞ்சாலை யில் கடுமையான பனி காணப்பட்டதால் சாலைகள் தெரியாதபடி இருந்தது. இதனால் இந்த சாலைகளில் சென்ற வாகனங்கள் மிதமான வேகத்தில் வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஹாரன் அடித்துக்கொண்டு ஊர்ந்து சென்றது.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
    • இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தற்போது மழை இல்லாததால் மாவட்டம் முழுவதுமே பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சவுண்டப்பூர், பாரியூர், மொடச்சூர், வடுகப் பாளையம், நல்ல கவுண்டன் பாளையம், நஞ்ச கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

    எதிரே நிற்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் இந்த பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் காலை நீண்ட நேரமாகியும் வாகனங்களின முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றது.மேலும் வயல் வெளிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனித்துளிகள் படிந்து இருந்தது.

    இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

    கிராம பகுதிகளில் பொதுமக்கள் பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மொத்தத்தில் கோபி செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதியே பனிப்பொழிவால் சூழ்ந்து இருந்தது.

    • மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது.
    • பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நாளை மறுதினம் மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் தொடங்கிய குளிர்காற்று காலை வரை வீசி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது.

    இதன் காரணமாக கடலூர், பாதிரிகுப்பம், திருவ ந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் காலை 7.30 மணி வரை பனி குறையாமால் காணப்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு எரிந்த படியும், ரயில்வே தண்ட வாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்து ள்ளதால் ரயில்களும் முகப்பு விளக்கு அணிந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சீதோஷ்ண மாற்றம் உருவாகி பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    • மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது.
    • காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.

    தருமபுரி,

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது.

    தற்போது மழை நின்றதால், பனி பொழிய தொடங்கியுள்ளது. இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, அரூர் நகரம், மொரப்பூர், கொளகம்பட்டி, கிருஷ்ணா புரம், காரிமங்கலம், தீர்த்தமலை, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன.

    இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி கார், பஸ்கள் சென்றன

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமான வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் பனிபொழிவு காணப்பட்டது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.

    நேற்று மாலை பொழுது ஆகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து ஏலகிரி மலைக்கு அதிகமாக உள்ளது.

    • ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
    • பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர்.

    விழுப்புரம்:  

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இன்று காலை 8.00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

    இந்த பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். ஊட்டியில் இருப்பது போல குளிர்ச்சியான நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட் டனர். இதேபோல் செஞ்சி பகுதியிலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.

    • மாலை 5 மணி முதலே பனிப்பொழிவு தொடங்குகிறது.
    • குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து 1418 மீட்டர் உயரத்தில் உள்ளது. தருமபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் 24 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில் செல்ல வேண்டும்.

    வத்தல் மலையில் சின்னாங்காடு, பால் சிலம்பு, பெரியூர், ஒன்றியக்காடு, கொண்டலாங்காடு, மண்ணாங்குழி, குழியனுர்,பெரியூர் நாயக்கனூர் உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் உள்ள மக்கள் கால்நடை விவசாயத்தை மூல ஆதார தொழிலாக வைத்துள்ளனர்.

    இங்கு அதிக அளவு காபி, மிளகு சாகுபடி செய்யப் படுகிறது.ஒரு சில விவசாயிகள் திணை, கேழ்வரகு, சாமை, கடுகு, அவரை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் இம்மலை கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

    மாலை 5 மணி முதலே பனிப்பொழிவு தொடங்குகிறது. இந்த பணிப்பொழிவு ஆறு மணி நெருங்கும் பொழுது இரவு 8 மணி போல் காட்சி அளிக்கின்றது. வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டபடி வந்தாலும் பாதை தெரிவதில்லை. பொதுமக்கள் 6 மணிக்கு தங்களுடைய வீடுகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

    கடந்த மூன்று தினங்களாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வாட்டி வதைக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    • பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஏரிகள் வேகமாக நிரம்பின.
    • அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக காலமாக பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் அரூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் ஏரிகள் வேகமாக நிரம்பின.

    ஒரு சில ஏரிகள் மற்றும் அணைகளில் இருந்து முழு கொள்ளளவை நிரம்பியதை அடுத்து உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை நீர் இருப்பதும் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலையை நிலவி வந்தது.

    அதன் தொடர்ச்சியாக இன்று நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதி மற்றும் தருமபுரி, நல்லம்பள்ளி, பாளையம் புதூர், வெள்ளக்கல், ஏலகிரி, அதியமான் கோட்டை, நாகர்கூடல் உள்ளிட்ட பகுதியில் அதிகாலை முதலே கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் பனிப்பொ ழிவு காரணமாக வாகனங்க ளும் இயக்க முடியாமல் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர்.

    ×