வாழப்பாடி பகுதியில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.
வாழப்பாடி பகுதியில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக பருவமழை பெய்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. காலை 9 மணி வரை மூடுபனி நீடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கடந்த சில தினங்களாக அதிகாலையில் மட்டுமின்றி, காலை 8 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com