என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஏலகிரி மலையில் கடும் பனிப்பொழிவு
  X

  ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவுகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்ட படி வந்தனர்.

  ஏலகிரி மலையில் கடும் பனிப்பொழிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகன ஓட்டிகள் அவதி
  • முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி கார், பஸ்கள் சென்றன

  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

  தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமான வந்து செல்கின்றனர்.

  இந்த நிலையில் ஏலகிரி மலையில் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று காலையில் பனிபொழிவு காணப்பட்டது.

  இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.

  நேற்று மாலை பொழுது ஆகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.

  இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் மேலும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து ஏலகிரி மலைக்கு அதிகமாக உள்ளது.

  Next Story
  ×