search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடும் பனிப்பொழிவு:  வாட்டி வதைக்கும் குளிரில் நெருப்பை   மூட்டி காயும் வத்தல்மலை கிராம மக்கள்  -மாலை நேரத்திலேயே இருள் சூழ்ந்து விடுகிறது
    X

    கடும் பனிப்பொழிவு: வாட்டி வதைக்கும் குளிரில் நெருப்பை மூட்டி காயும் வத்தல்மலை கிராம மக்கள் -மாலை நேரத்திலேயே இருள் சூழ்ந்து விடுகிறது

    • மாலை 5 மணி முதலே பனிப்பொழிவு தொடங்குகிறது.
    • குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து 1418 மீட்டர் உயரத்தில் உள்ளது. தருமபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் 24 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில் செல்ல வேண்டும்.

    வத்தல் மலையில் சின்னாங்காடு, பால் சிலம்பு, பெரியூர், ஒன்றியக்காடு, கொண்டலாங்காடு, மண்ணாங்குழி, குழியனுர்,பெரியூர் நாயக்கனூர் உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் உள்ளன. சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் உள்ள மக்கள் கால்நடை விவசாயத்தை மூல ஆதார தொழிலாக வைத்துள்ளனர்.

    இங்கு அதிக அளவு காபி, மிளகு சாகுபடி செய்யப் படுகிறது.ஒரு சில விவசாயிகள் திணை, கேழ்வரகு, சாமை, கடுகு, அவரை போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் இம்மலை கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

    மாலை 5 மணி முதலே பனிப்பொழிவு தொடங்குகிறது. இந்த பணிப்பொழிவு ஆறு மணி நெருங்கும் பொழுது இரவு 8 மணி போல் காட்சி அளிக்கின்றது. வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிட்டபடி வந்தாலும் பாதை தெரிவதில்லை. பொதுமக்கள் 6 மணிக்கு தங்களுடைய வீடுகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

    கடந்த மூன்று தினங்களாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வாட்டி வதைக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நெருப்பை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×