search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர்"

    • சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    பீகாரை சேர்ந்தவர் பவன் யாதவ் (வயது 27). இவர் திருப்பூர் நெசவாளர் காலனி திருமலை நகர் பி.எம்.காம்ப்ளக்ஸ் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திரதாரி (50) என்பவர் அவரது மனைவி சித்ராதேவி(43)யுடன் திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள மற்றொரு பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். ஒரே பகுதியில் இருவரும் வசித்து வந்ததால் பவன்யாதவுக்கும், உபேந்திரதாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பவன்யாதவ், உபேந்திரதாரி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது உபேந்திரதாரி மனைவி சித்ராதேவிக்கும் பவன்யாதவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

    இதையறிந்த உபேந்திரதாரி அதிர்ச்சியடைந்ததுடன், பவன்யாதவ்வை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சித்ராதேவியுடன் பேசி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்றிரவு பவன்யாதவ் வீட்டிற்கு சென்ற உபேந்திரதாரி, எனது மனைவியுடனான தொடர்பை விட்டு விடு என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, தான் வைத்திருந்த அரிவாளால் பவன் யாதவ்வை சரமாரி வெட்டினார். இதில் அவரது தலை, முழங்கை, வலது மணிக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பவன்யாதவ் சரிந்து விழுந்தார். உடனே அங்கிருந்து உபேந்திரதாரி தப்பி சென்றுவிட்டார்.

    பவன்யாதவ்வின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், பவன்யாதவ்வை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவன்யாதவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பவன் யாதவ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் வடமாநில தொழிலாளியை டிரைவர் வெட்டிக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
    • மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    கோவை,

    மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர் 65 வயது தொழிலாளி. இவர் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைப்புதூரில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ராஜேஷ் போஜா செட்டி(48) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

    மேலும் ராஜேஷ் போஜா செட்டி அடிக்கடி அந்த தொழிலாளியை தொடர்பு கொண்டு அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தி வந்தார்.ஆனால் தொழிலாளி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    இந்நிலையில் அவரது மூத்த மகளுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

    கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.

    இது ராஜேஷ் போஜா செட்டிக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் நேற்று காலை திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு இருந்த தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் போஜா செட்டி தொழிலாளி மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை அடித்து உதைத்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர்களையும் ராஜேஷ் போஜா செட்டி தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார்.

    இதுகுறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் திருமண மண்டபத்திற்குள் புகுந்து திருமணத்தை நிறுத்த முயன்ற ராஜேஷ் போஜா செட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி ஊத்துக்குளி பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு ரெயில் நிலையம் வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    வடமாநி லங்களில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்படும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில்ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற னர்.

    இதையடுத்து ஈரோடுரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் வெளி மாநில ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடுரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது ஈரோடுரெயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது எஸ்.5 பெட்டியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு பெரிய பை வைத்திருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை சோதனை செய்த போது அதில் 7 கிலோ கஞ்சாவை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும்.

    அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்காளம், கோல்பாரா பகுதியை சேர்ந்த பவதுல்லா (23) என தெரிய வந்தது. அவர் அந்த கஞ்சாவை கேரளாவிற்கு விற்க சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பவதுல்லாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன.
    • 2வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர்.

    பல்லடம் :

    திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சனுப் என்பவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 27ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள சேடபாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைகளை தூக்கிக்கொண்டு வந்த 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் லட்சுமி நகர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் சகானி மகன் சுதிர் குமார் (22) மற்றும் சங்கர் தாகூர் மகன் சஞ்சித் தாகூர் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 34 ஸ்மார்ட் செல் போன்கள், 31 சாதா செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திண்டுக்கல் அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் தாக்கினர்
    • வடமாநில வாலிபர், திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கினர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் குடகனாறு இல்லம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றி வந்தார். அவர் மயக்க நிலையில் சாப்பிடுவதற்கு ஓட்டல் ஏதேனும் உள்ளதா? என அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் அவரது மொழி தெரியாததால் அங்கு கஞ்சா போதையில் இருந்த 2 வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்களும் விசாரித்தபோது பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்டு திருடவந்ததாக கஞ்சா ஆசாமிகள் தெரிவி த்தனர். இதனையடுத்து ஹிந்தி தெரிந்த ஒருவர் விசாரித்தார். அப்போது தான் போர்வெல் லாரியில் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்து அனைவரும் சென்று விட்டுதன்னை பாதியிலேயே இறக்கி விட்டு சென்றதாகவும் கூறினார்.

    இதனால் ஓட்டல் எங்கு உள்ளது என தெரியாமல் பசியில் இருந்ததாகவும், தான்கேட்டதை தவறாக புரிந்து கொண்டுவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் மற்றொரு வாகனத்தின் மூலம் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • பள்ளியின் பின்புறம் இடிந்த மதில் சுவர் மீது ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே குதித்தார்.
    • பள்ளியில் அனைத்து பகுதிகளுக்கும் சுவர் எழுப்பி மாணவிகளின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.

    கோவை:

    கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

    பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனையொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற பொதுமக்கள் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பீகாரை சேர்ந்த சர்வன் குமார் (20) என்பதும், கோவை கலெக்டர் காலனி பகுதியில் வசிப்பதும் தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்ததால் விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது 'பள்ளியில் ஒரு சில இடங்களில் காம்பவுண்டு சுவர் இடிந்து கிடக்கின்றது. அனைத்து பகுதிகளுக்கும் சுவர் எழுப்பி மாணவிகளின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை.
    • வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேகாமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது37).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்குச் சென்ற சம்பத்குமாரை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்குள் யாரோ வந்தது போலவும், சமையலறைக்குள் இருந்து யாரு என கேட்டதாகவும், பதில் வராததால் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

    போலீசார்விசாரணையில் சம்பத் குமாரின் வீட்டிற்கு சென்று திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பஸ்வான் (30,) பந்தேப் பக்டி(32) பாபன் புயனா(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வட மாநில வாலிபர் கொலை பரபரப்பு தகவல்
    • 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    கோவை,

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் முசாப்பூர் மாலிக் ( வயது 24). இவர் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில்3-வது மாடியில் வசித்து வந்தார்.

    இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த மான்வா என்கற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார். 2 பேரும் துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் வசித்து வந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் மாத சம்ப ளத்திற்கு வேலைசெய்து வந்தனர்.

    கடந்த 11 மாதமாக நசிபுல் சேட், முசாப்பூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் நசிபுல் சேட், அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முசாப்பூர் மாலிக் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அங்கே இருந்த அவரிடம் நாங்கள் சம்ப ளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள்ளவும். ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு. எங்களை எதிர்த்து வாழ முடியாது. எங்கே போனாலும் உனக்குபணம் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.அதற்கு முசாப்பூர் மாலிக், "சம்பளம் கொடுத்தே தீர வேண்டும். நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். என்னை ஏமாற்ற நினைத்தால் விடமாட்டேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நசிபுல் சேட்டும்அவரது மகன் அனிஷேக்கும் சேர்ந்து முசாப்பூர் மாலிக்கை தாக்கினர். பின்னர் தலையை சுவற்றில் மோதி அடித்தனர். தொடர்ந்து அவர்கள் வாளி தண்ணீரில் தலையை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்தனர்.

    அப்போது அந்த அறையில் ஆனந்தகுமார் இருந்தார். தடுக்க வந்த அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் எதுவும் செய்யவில்லை. இங்கே இருந்தால் கொலை செய்ததை சொல்லி விடுவார் என நினைத்து அவரை கட்டாயப்ப டுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் நடந்த பின்னர் மேற்கு வங்கம் சென்ற ஆனந்தகுமார் திரும்ப வரவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முசாப்பூர் மாலிக் உடல் கைப்பற்றப்பட்டது.

    இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீ சார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை திரும்பி வந்த ஆனந்தகுமார் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கொலை வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நசிபுல் சேட், அனிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஜே.எம் எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி அனுமதி அளித்தார். நேற்று முன்தினம் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    "முசாப்பூர் மாலிக் எங்களது உறவினர். அவருக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தோம். ஆனால் அவர் சம்பள பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தார். மிரட்டினால் போய் விடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக பேசி மிரட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசாரணை முடிந்ததும் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 2 பேரையும் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • மாயமான வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கோவையில் நகைப்பட்டறை நடத்தி ரூ.1.5 கோடி தங்கத்துடன் வடமாநில வாலிபர் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை,

    கோவை இடையர் வீதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 47). இவர் வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 10 ஆண்டுகளாக நகைப்ப ட்டறை நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் எனது பட்டறையில் கொல்கத்தாவை சேர்ந்த சுஜித் மைட்டி (40) என்பவர் 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து .

    பின்னர் அவர் சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்தார். தொழில் ரீதியான பழக்கத்தில் நான் மற்றும் எனது உறவினர் ஆசிஸ் ஆதிக் ஆகியோர் சேர்ந்து சுஜித் மைட்டியிடம் ஒரு கிலோ 150 கிராம் தங்க கட்டிகளை ஆபரணங்களாக மாற்ற கொடுத்திருந்தோம்.

    ஆனால் அவர் தங்க கட்டிகளை வாங்கி மோசடி செய்து விட்டு தலை மறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. .

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். கோவையில் மட்டும் அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் 4 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்க கட்டிகளுடன் அவர் தப்பி சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அவர் வேறு யாரையாவது இது போல் ஏமாற்றியுள்ளாரா? அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நகைப்பட்டறை நடத்தி ரூ.1.5 கோடி தங்கத்துடன் வடமாநில வாலிபர் தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×