search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றதாக தந்தை, மகன் வாக்குமூலம்
    X

    சம்பளம் கேட்டு மிரட்டியதால் வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றதாக தந்தை, மகன் வாக்குமூலம்

    • வட மாநில வாலிபர் கொலை பரபரப்பு தகவல்
    • 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    கோவை,

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் முசாப்பூர் மாலிக் ( வயது 24). இவர் கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில்3-வது மாடியில் வசித்து வந்தார்.

    இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த மான்வா என்கற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார். 2 பேரும் துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் வசித்து வந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் மாத சம்ப ளத்திற்கு வேலைசெய்து வந்தனர்.

    கடந்த 11 மாதமாக நசிபுல் சேட், முசாப்பூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் நசிபுல் சேட், அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முசாப்பூர் மாலிக் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அங்கே இருந்த அவரிடம் நாங்கள் சம்ப ளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள்ளவும். ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு. எங்களை எதிர்த்து வாழ முடியாது. எங்கே போனாலும் உனக்குபணம் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.அதற்கு முசாப்பூர் மாலிக், "சம்பளம் கொடுத்தே தீர வேண்டும். நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். என்னை ஏமாற்ற நினைத்தால் விடமாட்டேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நசிபுல் சேட்டும்அவரது மகன் அனிஷேக்கும் சேர்ந்து முசாப்பூர் மாலிக்கை தாக்கினர். பின்னர் தலையை சுவற்றில் மோதி அடித்தனர். தொடர்ந்து அவர்கள் வாளி தண்ணீரில் தலையை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்தனர்.

    அப்போது அந்த அறையில் ஆனந்தகுமார் இருந்தார். தடுக்க வந்த அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் எதுவும் செய்யவில்லை. இங்கே இருந்தால் கொலை செய்ததை சொல்லி விடுவார் என நினைத்து அவரை கட்டாயப்ப டுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் நடந்த பின்னர் மேற்கு வங்கம் சென்ற ஆனந்தகுமார் திரும்ப வரவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முசாப்பூர் மாலிக் உடல் கைப்பற்றப்பட்டது.

    இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீ சார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை திரும்பி வந்த ஆனந்தகுமார் ஆர்.எஸ். புரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி கொலை வழக்குப்பதிவு செய்து ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நசிபுல் சேட், அனிஷேக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஜே.எம் எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தி அனுமதி அளித்தார். நேற்று முன்தினம் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    "முசாப்பூர் மாலிக் எங்களது உறவினர். அவருக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தோம். ஆனால் அவர் சம்பள பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தார். மிரட்டினால் போய் விடுவார் என நினைத்தோம். ஆனால் அவர் எங்களை கேவலமாக பேசி மிரட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    விசாரணை முடிந்ததும் தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 2 பேரையும் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×