search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "steal"

    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38). இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38).

    இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடையின் மேல் தளத்தில் இருந்த துணிகளை பார்ப்பதற்காக காந்திமதி சென்றுள்ளார். அப்போது கடைக்கு வந்த 2 சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் ரூ.41,500- ஐ திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

    காந்திமதி கல்லாப் பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது துணிக்கடையில் பணத்தை திருடியது பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த 14 வயது சிறுவனும், புது ரோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

    இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
    • அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
    • வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).

    துணை வட்டார

    வளர்ச்சி அதிகாரி

    இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.

    பீரோ திறந்து கிடந்தது

    இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.

    28 பவுன் நகை

    அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    2 தனிப்படைகள்

    நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.
    • சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலை பிரசன்னா நகரை சேர்ந்தவர் காசிராஜன், பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வியாபார விசயமாக வெளியே சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை கேட்டிலுள்ள கம்பியின் உள்பக்கமாக மாட்டிவிட்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இது குறித்து காசிராஜன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகி றார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள காமிரா பதிவையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • விடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மதுரை

    மதுரை வல்லானந்தபுரம் சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர் காலை வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது யாரோ மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூ.2.43 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

    வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சுப்பிரமணி அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் விபத்தை தவிர்க்க 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்து சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார். இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கையாக வேகத்தடைகள், பேரி கார்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன.

    இதற்காக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து விரைவில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை.
    • வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேகாமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சம்பத்குமார் (வயது37).

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார். இந்தநிலையில் கோவிலுக்குச் சென்ற சம்பத்குமாரை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்குள் யாரோ வந்தது போலவும், சமையலறைக்குள் இருந்து யாரு என கேட்டதாகவும், பதில் வராததால் வெளியே வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் ஓடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக வீடு திரும்பிய சம்பத்குமார் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தபோது யாருமில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.

    போலீசார்விசாரணையில் சம்பத் குமாரின் வீட்டிற்கு சென்று திருட முயன்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பஸ்வான் (30,) பந்தேப் பக்டி(32) பாபன் புயனா(21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி தாராபடவேட்டில் மளிகைக்கடை ஒன்று உள்ளது. அங்கு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் அங்கு பொருட்கள் வாங்குவது போல நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருட முயன்றார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் கைகளை கட்டிப்போட்டு காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அந்த வாலிபரிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் ஒரு வகையான போதைபொருளை உட்கொண்டிருந்ததால் மயக்க நிலையில் இருந்தார். அதனால் போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

    பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாகனம் மற்றும் நகைகளை திருடும் கும்பலை சேர்ந்தவரா?, அல்லது மோட்டார்சைக்கிள்கள் திருடும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்தும், அவர் பழைய குற்றவாளியா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இக்பால் என்ற 60 வயது முதியவரின் கிட்னியை மருத்துவர் விபு கார்க் திருடியுள்ளார்.

    இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மருத்துவர் விபு கார்க் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறையினர், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டள்ளதாக சிறப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள மண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கல்நீக்க சிகிச்சைக்காக இக்பால் என்ற 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விபு கார்க், நோயாளிக்கு தெரியாமல் அவரது கிட்னியை திருடியுள்ளார். இதனை அறிந்த இக்பாலின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மருத்துவர் விபு கார்க் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×