search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Northwest youth"

    நகைப்பட்டறையில் இருந்த 50 பவுன் நகை மாயமானது தொடர்பாக பட்டறையில் வேலை பார்த்த வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சபிக்குல்(வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுரை தெற்கு மாசி வீதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு பிரபல நகைகடைகளில் இருந்து வரும் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, டிசைன் செய்வது உள்ளிட்டவைகளை சபிக் குல் செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது அஹத் ஹாசி (19) என்பவரை உதவியளராக சபிக்குல் பணியில் சேர்ந்து உள்ளார்.

    நேற்று மதியம் சபிக்குல் நகைகளுக்கு பாலிஷ் போடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது முகமது அஹத் ஹாசி டீ வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் பட்டறைக்கு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் இல்லை.

    இதனால் சந்தேகமடைந்த சபிக்குல் பட்டறையில் இருந்து நகைகள் இருப்பை ஆய்வு செய்தார். அப்போது 50 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சபிக்குல் இதுகுறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டறையில் ஆய்வு நடத்தினர்.

    மாயமான முகமது அஹத்ஹாசி நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். மாயமான நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். #tamilnews
    புதுவை அருகே வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47). இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) ஆகியோர் வேலை பார்த்தனர். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

    இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பு என்று கூறினார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ் வாஸ் இறந்து போனார்.

    சம்பவம் நடந்த பார்ம் ஹவுசை சுற்றி மதில் சுவர் உள்ளதால் வெளியே வர முடியாததால் கொலை நடந்து பல மணி நேரம் ஆகியும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு வடமாநில தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.

    விடியற்காலையில் சம்பவம் குறித்து உள்ளூர் பொதுமக்களுக்கு தெரிய வரவே அவர்கள் மூலமாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி விபின்சர்க்கார் தப்பி செல்லாமல் அங்கேயே அழுதபடி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி தாராபடவேட்டில் மளிகைக்கடை ஒன்று உள்ளது. அங்கு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் அங்கு பொருட்கள் வாங்குவது போல நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருட முயன்றார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் கைகளை கட்டிப்போட்டு காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அந்த வாலிபரிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் ஒரு வகையான போதைபொருளை உட்கொண்டிருந்ததால் மயக்க நிலையில் இருந்தார். அதனால் போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

    பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாகனம் மற்றும் நகைகளை திருடும் கும்பலை சேர்ந்தவரா?, அல்லது மோட்டார்சைக்கிள்கள் திருடும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்தும், அவர் பழைய குற்றவாளியா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நாமக்கல் டோல்கேட் அருகே வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னரை ஓட்டி வந்த வட மாநில டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #lorrystrike
    நாமக்கல்:

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20-ந்தேதி லாரிகள் ஸ்டிரைக் தொடங்கியது. இன்றுடன் 6-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 4 அரை லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் சரக்குகள் போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து சிமெண்டு, கட்டுமான பொருட்கள், கோழித்தீவன மூலப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழகம் வருவது தடைப்பட்டு உள்ளது.

    இதைதவிர ஆலைகளுக்கு தேவையான எந்திரங்கள், மோட்டார் உதிரிபாகங்கள், காற்றாலை உற்பத்தி எந்திரங்கள், உள்ளிட்ட இரும்பு தளவாடங்கள் பெரிய, பெரிய கண்டெய்னர்களில் வைத்து டிரெய்லர் மற்றும் லாரிகள் மூலமாக தமிழகத்திற்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கண்டெய்னரில் புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி வந்த வட மாநில டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    அரியானா மாநிலம் பன்வால் ஜில்லா கட்டின் தாலுகா பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாபூ(வயது 40). கண்டெய்னர் லாரி டிரைவர்.

    இவர், அரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து புதிய மோட்டார் சைக்கிள்களை அடிக்கடி தமிழகத்திற்கு பெரிய கண்டெய்னரில் ஏற்றிக் கொண்டு வருவது வழக்கம்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியானாவில் இருந்து புதிய மோட்டார் சைக்கிள்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தார். நேற்று இரவு நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது கண்டெய்னர் லாரியை திடீரென மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி டிரைவர் சகாபூவிடம் வாக்கு வாதம் செய்தனர்.

    கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, இங்கிருந்து ஓடி விடு. இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என அந்த கும்பல் மிரட்டியது. அதற்கு சகாபூ கண்டெயினரில் புதிய மோட்டார் சைக்கிள் இருக்கிறது. இதை விற்பனை நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே நிறுத்தி விட்டு சென்றால் உரிமையாளர் சத்தம் போடுவார். எனவே கண்டெய்னர் லாரியை ஓட்ட அனுமதிக்குமாறு மர்ம கும்பலிடம் கெஞ்சினார். ஆனால், அந்த கும்பல் நாங்கள் சொன்ன பிறகும் கேட்க மறுக்கிறாயா? என கூறி திடீரென சகாபூ முகத்தில் சரமாரியமாக தாக்கினார்கள். வயிற்றில் கால்களால் எட்டி உதைத்தனர். தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பயங்கரமாக தாக்கினார்கள்.

    இதில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சகாபூ அய்யோ, அம்மா, என கதறி அழுதார். தன்னை காப்பாற்றுங்கள்... தன்னை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு அலறினார். சத்தத்தை கேட்டு சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் படபடவென இறங்கி அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    டிரைவர் சகாபூ படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி சென்ற லாரி டிரைவரும், கிளீனரும் வாளையாறு பகுதியில் வைத்து மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்கப்பட்டனர். இதில் கிளீனர் முபாரக் பாட்ஷா பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. #lorrystrike
    ×