search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-திருச்சி மேம்பாலத்தில் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு
    X

    கோவை-திருச்சி மேம்பாலத்தில் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு

    • அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் விபத்தை தவிர்க்க 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    கோவை

    கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.253 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இந்த மேம்பாலமானது ஜூன் மாதம் 11-ந்தேதி திறக்கப்பட்டது. பாலம் திறந்து சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பேர் பலியானார். இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன் எச்சரிக்கையாக வேகத்தடைகள், பேரி கார்டுகள், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்பட்டன.

    இதற்காக பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.பின்னர் சில தினங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. 40 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவுகளில் 30 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்த ஆனந்தகுமார் (51) பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இதனால் திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடுவில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து விரைவில் அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×