

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.