விடு புகுந்து நகை திருட்டு

விடு புகுந்து நகை திருடப்பட்டது. வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விடு புகுந்து நகை திருட்டு
Published on

மதுரை

மதுரை வல்லானந்தபுரம் சிக்கந்தர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர் காலை வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது யாரோ மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூ.2.43 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

வீடு திரும்பிய லதா வீட்டில் திருட்டு நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சுப்பிரமணி அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com