சேலத்தில் துணிக்கடையில் ரூ.41 ஆயிரம் திருடிய 2 சிறுவர்கள் கைது

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38). இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்தில் துணிக்கடையில் ரூ.41 ஆயிரம்  திருடிய 2 சிறுவர்கள் கைது
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் காமநா யக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி காந்திமதி (வயது 38).

இவர் சுந்தர் நகர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடையின் மேல் தளத்தில் இருந்த துணிகளை பார்ப்பதற்காக காந்திமதி சென்றுள்ளார். அப்போது கடைக்கு வந்த 2 சிறுவர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் ரூ.41,500- ஐ திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

காந்திமதி கல்லாப் பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது துணிக்கடையில் பணத்தை திருடியது பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த 14 வயது சிறுவனும், புது ரோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இருவரிடம் இருந்தும் ரூ. 37 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com